பெண்

அவள் அழகில் மயங்கி என்னையே மறந்து
அவளையே என்பார்வை விடாது மொய்த்திட
மௌனமாய் அவள் என்மீது விடுத்த
அந்த ஒரு பார்வை வேலைப் பாய்ந்து
என்னுள்ளத்தில் படிந்திருந்த மோகத் தீயை
மாய்த்து மங்கை அவளை இப்போது
பெண்ணரசியாய் சக்தியாய்ப் பார்க்க வைத்தது
ஆதியும் அந்தமும் சக்தி நீயே தாயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-21, 7:50 am)
Tanglish : pen
பார்வை : 96

மேலே