சையது மர்ஜுக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சையது மர்ஜுக் |
இடம் | : தேனி , தமிநாடு |
பிறந்த தேதி | : 09-Jul-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 289 |
புள்ளி | : 10 |
கண்ணில் காணும்
இவ்வுலகை விட,
கனவில் காணும்
காவிய உலகம் மேலானதே.
ஏனெனில்,
அவனும் அவளும்
கழித்த காலம்
அவனும் நானும்
அளித்த பாதை.
"மேகா என்ற பெயரினிலே மேகத்தை கொண்டவளே,
உன்னை பற்றி நித்தம் சொல்ல காலம் போதவில்லையடி,
சிறிது கால பேச்சினிலே கண்டறிந்த கதைகளிது,
கதை சொல்லி வந்தவளே கனவை காவியமாக்கியவளே,
துடிப்பான பேச்சினிலே துணிவை துடுக்காய் துணையாக்கியவளே,
அரசியல் பேசி ஆன்மீகம் தவிர்த்து; அறநெறி வளர்த்தவளே,
பெண்ணியம் பேசி பேராசை தவிர்த்து; பெருமை கொண்டவளே ,
இயற்க்கையை இணைத்து இறக்கையாய் பறந்தவளே,
வனத்தினை வளமையாக்க வாய்ப்பேச்சை வரமாய் பெற்றவளே,
நீ நாளும் கேட்கும் கேள்விகளுக்கு; நான் இன்னும் புதிராய் பூக்கிறேன்,
காலம் கரைய உன்னை பற்றி நித்தம் சொல்ல காத்திருக்கிறேன்,
நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கும் பேதை அல்லாமல்; ப
எண்ணற்ற நாபகங்கள், எண்ணிலடங்கா அனுபவங்கள், கடந்து சென்ற வருடம் கடத்தி செல்கிறது நினைவலைகளை!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அமேசான் எங்கே?
பிரேசிலின் பிரமியமே,
ஆக்சிஜனின் அடைக்கலமே,
இயற்கையின் இமையமே,
உனக்கே நெருப்பா?
மனிதனின் கோர முகத்தை கண்டுவிட்டாய் அல்லவா இனியாவது திருந்திக்கொள்;
ஆக்சிஜனை வெளியிடாதே,
மழையை பொழியாதே,
உணவை கொடுக்காதே,
மருந்தாக மாறாதே,
மனிதனுக்கு பாடம் நடத்து,
நீ இல்லை என்றால் என்னவாகும் என்று நிரூபித்துகாட்டு.
மனிதா ஆணவம் கொள்ளாதே உன்னால் எல்லாம் முடியும் என்று நீ நினைத்தால், இயற்கை என்ன செய்யும் என்பதை பார்க்க நீ உயிரோடு இருக்க மாட்டாய்.