அன்பான தோழிக்கு தோழனுடைய வாழ்த்து கவிதை
"மேகா என்ற பெயரினிலே மேகத்தை கொண்டவளே,
உன்னை பற்றி நித்தம் சொல்ல காலம் போதவில்லையடி,
சிறிது கால பேச்சினிலே கண்டறிந்த கதைகளிது,
கதை சொல்லி வந்தவளே கனவை காவியமாக்கியவளே,
துடிப்பான பேச்சினிலே துணிவை துடுக்காய் துணையாக்கியவளே,
அரசியல் பேசி ஆன்மீகம் தவிர்த்து; அறநெறி வளர்த்தவளே,
பெண்ணியம் பேசி பேராசை தவிர்த்து; பெருமை கொண்டவளே ,
இயற்க்கையை இணைத்து இறக்கையாய் பறந்தவளே,
வனத்தினை வளமையாக்க வாய்ப்பேச்சை வரமாய் பெற்றவளே,
நீ நாளும் கேட்கும் கேள்விகளுக்கு; நான் இன்னும் புதிராய் பூக்கிறேன்,
காலம் கரைய உன்னை பற்றி நித்தம் சொல்ல காத்திருக்கிறேன்,
நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கும் பேதை அல்லாமல்; பேரூருவமாய் வளர இந்த அன்பு நண்பனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். "
-மு.சையது மர்ஜுக்