பாரதிதாசனாரின் பெயரன் கோபாரதி பிறந்தநாள் வாழ்த்துக் கவி
வெள்ளாடை தவிர
வேறு ஆடை
அணியாதவர்
வெள்ளாடை வேறு யாரையும்
நினையாதவர்
இவர் பாரதிதாசன் எனும்
மகானின் மகனின் மகன்
இவர் தோள்களை
மறைத்திருக்கும் ஆடை
தோலாடை அல்ல
மேலாடை அல்ல
சாதாரண துண்டு
போல் ஆடை அல்ல
அது பாலாடை
பால் மனதை
மறைத்து இருப்பதால்
அது பாலாடை
தமிழ் தாயின் ஆசை
தமிழ் வளர
செல்வம் இவரிடம்
சேரவேண்டும்
இவர் தமிழ் வாழ ஒரு தமிழ் பெண்ணை மணக்காது
தமிழ் பண்ணை மணந்தவர்.
தமிழ் கவிஞர்களின் அரசன் எட்டயபுரத்தில் கோ பாரதி
இக்கவியரங்கதின் அரசன்
இதோ எட்டும்
தூரத்தில் கோ .பாரதி
பாரதிக்கும் இவருக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
பாரதிக்கு முறுக்கு மீசை
நம் கோ பாரதிகோ
சுருக்கு மீசை
இவர் காந்தி நகரில்
வாழும் காந்தி
தமிழ் தாய் மகிழ்கிறாள் இவரின் பிறந்த நாளில் இவரை
குழந்தையாய்
தன் கைகளில் ஏந்தி
இவர் ஊர் ஆண்டும்
நூறாண்டும்
இப்பார் ஆண்டும்
மகிழ்ச்சியாய் வாழ
அன்போடு வாழ்த்துகிறோம்