கவிஞன் வளர்பிறைதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞன் வளர்பிறைதாசன்
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  15-Mar-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2021
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  7

என் படைப்புகள்
கவிஞன் வளர்பிறைதாசன் செய்திகள்
கவிஞன் வளர்பிறைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2021 8:05 pm

கம்மல்.....!!!

பெண்ணின் பேரழகு அவள் காதில் மிளிரும் சிறிய கம்மல் தானே

காதலன் கண்கொண்டு அவள் கண்ணை நோக்க விடாமல் தடுப்பதும் ,

அவள் காதின் ஓரம் சிணுங்கும் கம்மல் தானே

சின்ன சிரிப்பையும் மெருகேத்துவது ,

அவள் காதில் சிரிக்கும் சிறிய கம்மல் தானே

பெண்ணை ஒளிர வைப்பதும்

அவள் காதில் அணிந்திருக்கும்

சிறிய கம்மல் தானே

குட்டி மா!!!
- கவிஞன்.வளர்பிறைதாசன் 

மேலும்

கவிஞன் வளர்பிறைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2021 8:01 pm

போறபோக்கில் ஒரு பெண்ணிற்கு ஒரு கவிதை!!!

சாலை ஓரம் ஒரு சாரல் காற்று

மனதிற்குள் ஒரு சங்கீத ஊற்று

அவள் கண்களோ தெளிந்த நீரோடை

அவள் இதழோ தேனீக்கள் புசிக்கும் தேனாடை

அவள் சிரிப்போ சிதறிய முத்துக்கள்

அவள் பார்வை என் மனதின் யுத்தங்கள்

அவளது கன்னம் இரட்டை பிறைநிலவு

உன்னை நான் பார்க்காமல் இருக்கலாம்

கண்டு நேசிக்கும் உறவை விட

காணாமல் நேசிக்கும் உறவு

அற்புதமானது

நீ

நான்

என்று

பிரிவு இல்லாமல்

நாம்

என்ற

உறவில்

கலந்து இருப்போம்

காலம் வரைக்கும் அன்பால் பிணைந்து இருப்போம்

என்றும் காத்திருக்கும் உன்...........

விடையளிக்க விரைவில் வருவாயா?

மேலும்

கவிஞன் வளர்பிறைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2021 10:44 pm

பெண்கள் தினம்.......



அச்சங்கள் பெண்மையை மூடி மறைத்ததம்மா........

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா......

நாட்டில் உள்ள பெண்கள் என்ன அடங்கும் குதிரைகளா ?

இல்லை,

ஆடவருக்கு அடிமை செய்யும் காவல் அடிமைகளா ?



வீடாலும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

இன்றும் ஊமைகள் போல் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

என்று ஒரு அவல நிலை பெண் ஒருத்தி பாடுகிறாள்



இந்த நிலையே அழித்து ஆணின் இச்சை பார்வையே ஒழித்து

அறம் என்னும் நரம்பு புடைத்து வரும் ஏளனம் அடித்து உடைத்து

உனக்கு என ஒரு தடத்தை பதித்து இடியே போல் இடித்து

பெண்ணே......!!!

தடைகளை உடை.........!!! ப

மேலும்

கவிஞன் வளர்பிறைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2021 12:19 pm

தமிழ் சிறப்பு........!!!

செந்தமிழை செழுந்தமிழாக்கி ,
முத்தமிழை மூன்றாக பிரித்து
அதை ,
நாற்படையில் இயற்றி
அதை ,
ஐந்நிலத்தில் அறிவித்து
ஆறாம் அறிவுக்கு புகட்டி
ஏழு ஸ்வரங்களில் இயற்றி
எட்டு திசைகளில் ஒலிக்க
எங்கள் தமிழ் முழங்க கேப்போம்
எதிலும் ,
தமிழ் விளங்க கேப்போம்
கங்கை இமையம் கடந்து
கன்னித்தமிழை கொண்டு செல்வோம்
திங்கள் செல்லும் விண்வெளி பாதையில்
மங்காத தமிழ் ஒலி சிந்தக்காண்போம் .

- என்றும் குட்டி சிரிப்புடன் உங்கள் கவிஞன். வளர்ப்பிறைதாசன் .

மேலும்

கவிஞன் வளர்பிறைதாசன் - கவிஞன் வளர்பிறைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2021 3:43 pm

என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா ?

காணும் கண்கள் எல்லாம் உன் கண்கள் ஆகாதோ?
உன் கண்ணை காணாமல் என் தாகம் தீராதோ?
உன் கண்கள் என்னைத்தான் காணாமல் போகுமோ?
உன் கண்கள் என்னை கண்டவுடன் என் துக்கம் தீருமோ?

தேனின் இதழை பெற்றவளோ ?
இல்லை -
தேனாடையுற்றவளோ ?

என் மனதில் தோன்றிய காதல் என்ற களவோ ?
இல்லை
கருமை கலக்காத வெண்ணிலவோ ?

உன்னை காண என் கண்கள் காத்திருக்குமோ?
இல்லை
உன்னை எண்ணி என் கவிதைகள் பூக்களாக பூத்திருக்குமா ?

என் கேள்விக்கு பதில் நீ தருவாயா ?
இல்லை என் கேள்விக்கு பதிலாக நீ வருவாயா ?

உன் பதிலுக்காக காலம் வரை காத்திருக்கும் என் வரிகள் ...........

மேலும்

நன்றி நட்பே 21-Feb-2021 12:09 pm
இனிமை வரிகள் 20-Feb-2021 3:55 pm

என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா ?

காணும் கண்கள் எல்லாம் உன் கண்கள் ஆகாதோ?
உன் கண்ணை காணாமல் என் தாகம் தீராதோ?
உன் கண்கள் என்னைத்தான் காணாமல் போகுமோ?
உன் கண்கள் என்னை கண்டவுடன் என் துக்கம் தீருமோ?

தேனின் இதழை பெற்றவளோ ?
இல்லை -
தேனாடையுற்றவளோ ?

என் மனதில் தோன்றிய காதல் என்ற களவோ ?
இல்லை
கருமை கலக்காத வெண்ணிலவோ ?

உன்னை காண என் கண்கள் காத்திருக்குமோ?
இல்லை
உன்னை எண்ணி என் கவிதைகள் பூக்களாக பூத்திருக்குமா ?

என் கேள்விக்கு பதில் நீ தருவாயா ?
இல்லை என் கேள்விக்கு பதிலாக நீ வருவாயா ?

உன் பதிலுக்காக காலம் வரை காத்திருக்கும் என் வரிகள் ...........

மேலும்

நன்றி நட்பே 21-Feb-2021 12:09 pm
இனிமை வரிகள் 20-Feb-2021 3:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே