என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா

என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா ?

காணும் கண்கள் எல்லாம் உன் கண்கள் ஆகாதோ?
உன் கண்ணை காணாமல் என் தாகம் தீராதோ?
உன் கண்கள் என்னைத்தான் காணாமல் போகுமோ?
உன் கண்கள் என்னை கண்டவுடன் என் துக்கம் தீருமோ?

தேனின் இதழை பெற்றவளோ ?
இல்லை -
தேனாடையுற்றவளோ ?

என் மனதில் தோன்றிய காதல் என்ற களவோ ?
இல்லை
கருமை கலக்காத வெண்ணிலவோ ?

உன்னை காண என் கண்கள் காத்திருக்குமோ?
இல்லை
உன்னை எண்ணி என் கவிதைகள் பூக்களாக பூத்திருக்குமா ?

என் கேள்விக்கு பதில் நீ தருவாயா ?
இல்லை என் கேள்விக்கு பதிலாக நீ வருவாயா ?

உன் பதிலுக்காக காலம் வரை காத்திருக்கும் என் வரிகள் ..............!!!

- கவிஞன்.வளர்ப்பிறைதாசன்

எழுதியவர் : கவிஞன்.வளர்ப்பிறைதாசன் (20-Feb-21, 3:43 pm)
பார்வை : 192

மேலே