ஆனந்தம்

ஆனந்தம்

நேரிசை ஆசிரியப்பா

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாக்கியம்
ஆனந்தமாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தம் கூத்துகந் தானுக்கே (திருமூலர்)



ஆனந்த கூத்தனாகிய எம்பெருமான் சிவனுக்கு
அகிலசராசரம் அந்த பகிரண்டங்கள் அமைத்தியங்கும்
விதங்களுடன் திறந்தவெளியான அரங்கில் சக்தியோடு
ஆடுவது ஆனந்தம்அவன்மீது பாடும் பாடல்களைக் கேட்பதில்
ஆனந்தம்.உட னொத்து வாசிக்கும் இசைக் கருவிகளால்
உண்டாகும்இசை ஆனந்தம் . ஆனந்தம் என்பதே தனை
மறந்தாடும்சிவம். அவனே நடராசன். நட ராசனே ஆடும்
அணுக்கள்.அணுக்களின் இடையரா இயக்கமதுவே
பேரானந்தம்..இந்த மொத்த சராசர அணுக்களின்
இடையரா ஆட்ட இயக்கமே கூத்தாக நடராசனெனும்
ஆனந்தக் கூத்தகனாம்.




திருமூலன் பலவாயி ரமாண்டுக் குமுன்னவர்
இத்திரு நாட்டின் மாபெரும் சித்தர
விஞ்ஞானி இறைவனைக் தெரிசித் தவரும்
நந்தி வம்ச வழியில்
வந்தமூலர் பதினெண் சித்தில் ஒருவரே

கோளின் கோட்பாட் டையறிந் தவராம்
ஞானம் தத்துவம் அட்டமா சித்தி
காயசித்தி மருத்துத் தங்கச் சித்தி
மாயமந் திரபிர சாத சித்தி
ஐந்தெழுத் தெட்டெழுத் துசித்தி தேக
சித்தி வரப்பிர சாத சித்தி
கணகிலா அண்ட புவன பிரபஞ்ச
அண்ட நகர்வு கோச்சார மறிந்தவர்
சித்திலே இருபத் தாறுதுறை கண்டார்
அத்தனை தகுதி மூலருக்கு
அவரின் தெய்வம் ஓங்கார சிவனுமே


தலையாய சித்தாம் அகத்திய சித்தும்
தமிழைத் தாரை வார்த்து வாழ்த்தி
நமக்கு மீயநாம் தமிழர் ஆனோம்
அறுமுகன் அகத்தியன் குருவாம் அவனின்
மூத்தோன் ஆனை முகத்தோன் என்றார்
பரம சிவனின் மகர்க ளாமே
சம்பந்தர் திருநாவுக் கரசர் சுந்தரர் p
மாணிக்க வாசகர் ஆழ்வார்கள் வள்ளுவம்
வளர்த்து மகிழ்ந்த தின்நாடு
எம்சிவம் மறந்தோடி யோனையென் சொல்லவோ

எழுதியவர் : பழனி ராஜன் (20-Feb-21, 2:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 202

மேலே