நெஞ்சத்திலே

கட்டழகில் கண்ணை
வச்சேன்.
மொட்டாய் நெஞ்சமும்
மலர்ந்திச்சு.
உன் கட்டு மீசை
மேலே ஆச வச்சேன்.
கட்டுக் கரும்பாட்டம்
மோகமும் வளர்ந்திடிச்சு.

அய்யனார் சாமியாட்டம் நீ எண்ணு
பொய் சொல்லிக்க மாட்டேன்
-நானும்
வீச்சு அருவாள் பார்வை எண்ணு
கத வீசிக்கவும் மாட்டேன் .
ஆனாலும் என் நெஞ்சத்திலே
மஞ்சமிட்ட சிங்கமடா நீயும்.

பேச்சுக்குள்ளே காந்தம் வச்சு.
வார்த்தையாலே வளைச்சுப் போட்டு.
உசுரைக் கொள்ளையிட்டு.
மூச்சைக் கொன்னு போயிட்டாயடா நீயும்.

பாதமும் தடுமாறி பாதையும்
தடம் மாறி போனாயே ஏனடா.
பேதை இவ உள்ளத்திலே
நீ சொல்லால் நட்டு விட்ட
செடியோ நெஞ்சத்திலே
முள்ளாய்க் குத்துவதைப் பாரடா.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (20-Feb-21, 2:23 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : nenchathile
பார்வை : 513

மேலே