தமிழ் சிறப்பு

தமிழ் சிறப்பு........!!!

செந்தமிழை செழுந்தமிழாக்கி ,
முத்தமிழை மூன்றாக பிரித்து
அதை ,
நாற்படையில் இயற்றி
அதை ,
ஐந்நிலத்தில் அறிவித்து
ஆறாம் அறிவுக்கு புகட்டி
ஏழு ஸ்வரங்களில் இயற்றி
எட்டு திசைகளில் ஒலிக்க
எங்கள் தமிழ் முழங்க கேப்போம்
எதிலும் ,
தமிழ் விளங்க கேப்போம்
கங்கை இமையம் கடந்து
கன்னித்தமிழை கொண்டு செல்வோம்
திங்கள் செல்லும் விண்வெளி பாதையில்
மங்காத தமிழ் ஒலி சிந்தக்காண்போம் .

- என்றும் குட்டி சிரிப்புடன் உங்கள் கவிஞன். வளர்ப்பிறைதாசன் .

எழுதியவர் : கவிஞன்.வளர்ப்பிறைதாசன் (21-Feb-21, 12:19 pm)
Tanglish : thamizh sirappu
பார்வை : 81

மேலே