ஆன்மா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆன்மா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ஆன்மா செய்திகள்
பெண் தேவதை
தேவதை என்றாலே பெண் மட்டும்தானே
இது என் குட்டி தேவதை பற்றியது
பிறந்த அன்று பார்த்த பிஞ்சு முகம்
இன்று நினைவில் இல்லை என்றாலும்
முழுநிலவு போன்று வட்ட முகம்
தத்தி தத்தி நடக்கும் அன்னநடை
என்னுள் பதிந்த பசுமரத்தாணி
என் தேவதை அழகானவள் மட்டுமல்ல
அறிவானவள்கூட என்ற இறுமாப்பு
என்றும் உண்டு என்னிடம்
அவள் எனக்கு மட்டுமல்ல
அன்று என்னை சுற்றி இருந்த
அனைவர்க்கும் அவள் நடமாடும் தேவதை தான்
அவளை தூக்கி திரிந்த நினைவுகளும்
அவளுடன் விளையாடி கழித்த நாட்களும்
என்னுள் பசுமையாய் இன்றும்
நிறைய அடித்திருக்கிறேன்!!
அவளும் அழுதிருக்கிறாள் !!
அனால் அடுத்த நிமிடமே
அருகில் வந்து அண்ணா !!! என்பாள்
இந்த வார்த்தை அன்றே எனக்கு
பல பொறுப்புகளை உணர்த்தியது
என் வாழ்வின் ஒருபாதி
அவளுடன் அவளுக்காக கடந்தது
மறுபாதி அவளுக்கானது... ஆம் !
அவள் குட்டி தேவதை அல்ல
அவள் ஒரு தேவதை
அழகான இரு குட்டி ஆண் தேவதைகளுடன்
ஆக்கம் : ஆன்மா
அன்னையின் சிரிப்பு !!!
நமக்கு பரிச்சயம் புன்முறுவல் மட்டுமே.
அவள் உள்ளக்கிடக்கையில் பொறுமல்களை
ஏனோ முகத்திற்கெதிர் கூறாமல்
மனதிற்குள்ளே மறைக்கும் மர்மம்
நம் மனம் நோகாதிருக்க அன்றி வேறில்லை
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமாமே
நீ என் அன்னையை கிடைக்க என்ன தவம் செய்தேனோ யான்!!!
ஆக்கம் : ஆன்மா
அந்த அணைப்பில் சிலிர்த்தது என் உடல்
என் மீதான அத்துனை அன்பையும் ஒன்றுகூடி
ஒருங்கே என் மீது சுமத்துவதாக இருந்தது
பிரிவின் சுமையினை உணர்த்தியது
இனியென்று காண்போம் என கேட்டது
என்னை விட்டு போகாதே என்றது
சீக்கிரம் திரும்பி வந்துவிடு என்றது
ஓர் அணைப்பில் இத்துணையா
ஆம்! ஆம்! ஆம்!
பன்னாட்டு விமான நிலையதின் புறப்பாடு வாயிலில்
ஒவ்வொரு தந்தையின் அணைப்பும்
இவ்வாறே பல சமிக்கைகள் செய்யும்
ஆத்மார்த்தமாக மட்டும் அல்ல
ஆன்மாவுக்குள் ஊடுருவும் அணைப்பு
இதை உணர்ந்தவர்களுக்கு புரியும்
உணராதவர்கள் அடுத்த வாய்ப்பு கிட்டும்பொழுது
அகம்சார்ந்து சிலாகித்து பாருங்கள் தெரியும்
தந்தை !!! தாயையும் உள்ளடக்கியவர் என்று
கருத்துகள்