அந்த அணைப்பில் சிலிர்த்தது என் உடல் என் மீதான...
அந்த அணைப்பில் சிலிர்த்தது என் உடல்
என் மீதான அத்துனை அன்பையும் ஒன்றுகூடி
ஒருங்கே என் மீது சுமத்துவதாக இருந்தது
பிரிவின் சுமையினை உணர்த்தியது
இனியென்று காண்போம் என கேட்டது
என்னை விட்டு போகாதே என்றது
சீக்கிரம் திரும்பி வந்துவிடு என்றது
ஓர் அணைப்பில் இத்துணையா
ஆம்! ஆம்! ஆம்!
பன்னாட்டு விமான நிலையதின் புறப்பாடு வாயிலில்
ஒவ்வொரு தந்தையின் அணைப்பும்
இவ்வாறே பல சமிக்கைகள் செய்யும்
ஆத்மார்த்தமாக மட்டும் அல்ல
ஆன்மாவுக்குள் ஊடுருவும் அணைப்பு
இதை உணர்ந்தவர்களுக்கு புரியும்
உணராதவர்கள் அடுத்த வாய்ப்பு கிட்டும்பொழுது
அகம்சார்ந்து சிலாகித்து பாருங்கள் தெரியும்
தந்தை !!! தாயையும் உள்ளடக்கியவர் என்று