பெண் தேவதை தேவதை என்றாலே பெண் மட்டும்தானே இது...
பெண் தேவதை
தேவதை என்றாலே பெண் மட்டும்தானே
இது என் குட்டி தேவதை பற்றியது
பிறந்த அன்று பார்த்த பிஞ்சு முகம்
இன்று நினைவில் இல்லை என்றாலும்
முழுநிலவு போன்று வட்ட முகம்
தத்தி தத்தி நடக்கும் அன்னநடை
என்னுள் பதிந்த பசுமரத்தாணி
என் தேவதை அழகானவள் மட்டுமல்ல
அறிவானவள்கூட என்ற இறுமாப்பு
என்றும் உண்டு என்னிடம்
அவள் எனக்கு மட்டுமல்ல
அன்று என்னை சுற்றி இருந்த
அனைவர்க்கும் அவள் நடமாடும் தேவதை தான்
அவளை தூக்கி திரிந்த நினைவுகளும்
அவளுடன் விளையாடி கழித்த நாட்களும்
என்னுள் பசுமையாய் இன்றும்
நிறைய அடித்திருக்கிறேன்!!
அவளும் அழுதிருக்கிறாள் !!
அனால் அடுத்த நிமிடமே
அருகில் வந்து அண்ணா !!! என்பாள்
இந்த வார்த்தை அன்றே எனக்கு
பல பொறுப்புகளை உணர்த்தியது
என் வாழ்வின் ஒருபாதி
அவளுடன் அவளுக்காக கடந்தது
மறுபாதி அவளுக்கானது... ஆம் !
அவள் குட்டி தேவதை அல்ல
அவள் ஒரு தேவதை
அழகான இரு குட்டி ஆண் தேவதைகளுடன்
ஆக்கம் : ஆன்மா