பாரதத்தை படைத்த பாரத தாயே ஏன் இன்னும் பொறுமையாய்...
பாரதத்தை படைத்த பாரத தாயே
ஏன் இன்னும் பொறுமையாய்
இருக்கிறாய் பொங்கி எழு
போர்வையால் போர்த்திவிடு
அனைவரையும் உறங்கி
விடுகிறோம்
உயிர்களை மதிக்க தெரியாத
உயிர்கள் இருந்தால் என்ன
இறந்தால் என்ன
ஒரு பக்கம் காதலும் காமமும் வேறு என்று உணராமல்ணி ஆணிவேறாய் நினைத்து குத்திக் கொலை செய்கிறான்
மறுப்பக்கம் காவலுக்கு அர்த்தம் தெரியாமல் கர்ப்பிணியையே காலால் உதைத்து அழிக்கிறான்
பட்டப்படிப்பு இருந்தும் பக்கப்பலம் இல்லாமல் பாலைவனமாய் பலரின் வாழ்க்கை
மறுப்பக்கம் ஆட்சி செய்வது போல் காட்சி காட்டி கட்சியை வளர்க்கும் கூட்டம்
விதை விதைத்து விண்ணை பார்த்து விணாகி போயிருக்கும் விவசாயி
இவர்களை பார்த்து கண் கலங்கி நான் கேட்கிறேன்
போர்த்தி விடு எங்களை புதைந்து விடுகிறோம்
ஓரு அழுக்குரலில் ஐந்து அடிக்குள்