எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் நாடு




அழுகு நிறைந்த நாட்டினில்‼
அறிவு அற்ற தலைவனை‼
தேர்ந்து எடுத்த முட்டாளாய் ‼
வாழ்ந்து வருகிறோம் குடிகமகனாய்!! 

தண்ணீர் இல்லா தாகத்தில்‼
உணவு இல்லா சோகத்தி்ல்‼
வளர்ச்சி இல்லா துயரத்தில் ‼
மண்ணில் மடிந்து சாகிறோம் ‼

கற்பை கொல்லும் கொடியவனை ‼
நீதியும் கண்டு உறங்குகிறது ‼
வனத்தை அழித்த வேட்டையனை ‼
வனவிலங்கு இறையாய் காண்கிறது ‼

திரையில் தோன்றும் கூத்தாடியை
தலைவன் என்று பார்ப்பதும்‼
தரையில் நிற்கும் போராளியை 
நடிப்பவன் என்று நினைப்பதும்‼

என்றும் சாபம் ஏற்ற மக்களாய்..! 
நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! 

- வினித் 


மேலும்

எனது அடையாளம்
( எழுத்து இணையதள உறவுகளுக்கு என் முதல் வணக்கங்கள். மனிதர்கள் அனைவரும் சமத்துவம் காணவேண்டிய இந்த உலகத்தில் இங்கு இன்றும் சிலர் தங்களின் சாதியை தங்களது அடையாளமாகக் கருதுகிறார்கள். அதேப் போன்று நானும் "எனது சாதியை" எனது முழு அடையாளமாகவும்; எனது முதல் எண்ணமாகவும் இன்று சமர்பிக்கிறேன்.ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)

மனித சாதியில்
ஆண் பிரிவு
அழியாத எனது அடையாளம்....!!

மேலும்

பாரதத்தை படைத்த பாரத தாயே 


 ஏன் இன்னும் பொறுமையாய் 

இருக்கிறாய்     பொங்கி எழு

போர்வையால் போர்த்திவிடு   

 அனைவரையும் உறங்கி

 விடுகிறோம்

உயிர்களை மதிக்க தெரியாத

 உயிர்கள் இருந்தால் என்ன

 இறந்தால் என்ன

ஒரு பக்கம் காதலும் காமமும் வேறு என்று உணராமல்ணி ஆணிவேறாய் நினைத்து  குத்திக் கொலை செய்கிறான்

மறுப்பக்கம் காவலுக்கு அர்த்தம் தெரியாமல் கர்ப்பிணியையே காலால் உதைத்து அழிக்கிறான்

பட்டப்படிப்பு இருந்தும் பக்கப்பலம்  இல்லாமல் பாலைவனமாய் பலரின் வாழ்க்கை

மறுப்பக்கம் ஆட்சி செய்வது போல் காட்சி காட்டி கட்சியை வளர்க்கும் கூட்டம்

விதை விதைத்து விண்ணை பார்த்து விணாகி போயிருக்கும் விவசாயி

இவர்களை பார்த்து கண் கலங்கி நான் கேட்கிறேன்  

போர்த்தி விடு எங்களை புதைந்து விடுகிறோம்
ஓரு அழுக்குரலில்  ஐந்து அடிக்குள்

மேலும்

பள்ளி செல்லும் 

பிள்ளைக்காய்
மாற்றான் பள்ளியறையில்
பிணமானால்
பெண் ஒருத்தி....

(விலைமகள்)

மேலும்

 இரு நாட்களுக்கு முன்புசெய்தித்தாள் வசிக்கும்பொழுது தற்செயலாக கண்ணில் பட்டது....  

  மத்திய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் - கலாச்சாரம் - சுற்றுலா துறையில் தனிப்பொறுப்புகளுடன் கூடிய இணை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற அல்போன்ஸ் கண்ணன்தானாம் விவசாய குடும்பத்தில் பிறந்த வித்தீயசமான மனிதர்.  11  குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தவர், ஐ.ஏ.ஸ். தேறி கலெக்டராகி, பின்பு அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆகி, இப்போது மத்திய மந்திரியாகிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

"மணிமலை என்ற சிறிய கிராமத்தில் நன் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். கடினமாக உழைத்து முன்னேறவேண்டும் என்ற கொள்கையுடைய விவசாயி அவர். பள்ளி ஆரம்ப மணி அடிக்கும் வரை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருப்பார்.பெற்றோருக்கு நாங்கள் ஒன்பது குழந்தைகள் கூடுதலாக அவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தர். அதனால் நங்கள் ௧௧ குழந்தைகள் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வளர்ந்தோம்.

பள்ளிக்கூடம் செல்லும் முன்பே நாங்கள் தோட்டத்தில் இறங்கி விவசாய வேலை செய்வோம். அம்மாவும் எங்களோடு வேலை பார்ப்பார்.எங்களை வரிசையாக நிற்க வைத்து வேலை செய்ய சொல்வார்கள். யாராவது ஒருவர் நழுவி போனாலும் கண்டிபார்கள். நங்கள் ஆற்றில் வலைவீசியும், தொண்டில் போட்டும் மீன் பிடிப்போம். இயற்கையை ரசித்து வளர்ந்தோம். அப்படி வளர்ந்தால் தன மனிதர்களோடு அன்பு உண்டாகும். நங்கள் வீட்டுவேலை செய்பவர்களோடு அமர்ந்து தன உணவருந்துவோம். எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கை எங்கள் மனதில் அப்போதே பதியவைக்கப்பட்டுவிட்டது.

நான் ஒரு கனவை நோக்கி பயணிப்பவன். அதை அடையும் வரை முயற்சி செய்யும் தைரியம் எனக்கு உண்டு. அதற்காக கடிணமாக உழைக்க கூடிய மனதும் எனக்கு உண்டு. தோற்கலாம்..... ஜெயிக்கலாம்.... அனால் எப்போதும் நம்பிக்கை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஜென்மம் நமக்கு ஒன்று தான். மீதமுள்ள காலத்தில் புதியதாக எதாவது ஒன்று செய்யவேண்டும் என்று தோன்றியதால் ஐ.ஏ.ஸ். பணியை ராஜினாமா செய்தேன். ஆனால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நன் ஐ.ஏ.ஸ். ஆகவேண்டும். ஏனென்றால் அதிகாரம் நிறைந்த, மக்களுக்கு உதவ முடிந்த பனி அது. ஆனால் ஒவொரு முறையும் நன் ஐ.ஏ.ஸ். பணியை ராஜினாமா செய்துவிடுவேன்" என்று கூறி சிரித்தார்.

     அல்போன்ஸ் கண்ணன்தானாம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்   242   மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதை குறிப்பிட்டு கேட்க அவர் பதிலளிக்கையில்......

"நான் ஒரு சம்பவத்தை  சொல்கிறேன். நன் உயர்கல்வி துறை செயலாளராக இருந்த காலம். அப்போது பிளஸ்- டு  வில் கேரளாவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு கொடுக்க விரும்பினேன். அதே கூட்டத்தில் முதல் மந்திரியும் இதர மந்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த நம்பர் ஒன் மாணவியிடம் ,'நீ கேரளாவில் அதிக புத்திசாலி அல்லவா! எளிதான கேள்வி ஒன்றை உன்னிடம் கேட்கிறேன். நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய்? என்று கேட்டேன். அவள் சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, நான் போய் அம்மாவிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன் என்றால். நான் அந்த மாணவியை கேரளத்திலையே நம்பர் ஒன் மந்தபுத்தி கொண்டவள் என்பேன். இப்படித்தான் இன்றைய மாணவர்களின் படிப்பு இருக்கிறது. இப்படி படிப்பதால் எதாவது பலன் இறுக்கிரதா? இவர்களுக்கு    மனிதர்கள் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் உலகம் பற்றியும் கவலை இருக்கிறதா ? இவர்களுக்கு மனிதர்கள் பற்றியும், உலகம் பற்றியும், மற்றவர்களின் கவலை, கண்ணீர் பற்றியும் தெரிவதில்லை. இதெல்லாம் வகுப்பறையில் இருந்து கிடைக்காது. பெற்றோரிடம் இருந்து தான் கிடைக்கும்..." என்று விளக்கம் தருகிறார். 

கலை, கலாச்சாரம், தத்துவம், வாழ்வியல் ஐந்தாயிரம் ஆண்டுகள் சிறப்பு கொண்ட இந்தியாவின் பெருமைகளை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மத்திய மந்திரியின் லட்சியமாக இருக்கிறது.


இவ்வாறு அதில் இருந்தது. இதை படித்ததும்  ஒரு விதமான நம்பிக்கை உண்டானது, இன்றைய சூல்நிலையில் இவரை போன்ற சில தலைவர்களும் இருக்கிறார்கள் என்று பெருமை பட வைக்கிறார்.
அவர் கூறியது போல் இன்றைய கல்வி நிலைமையும் அவ்வாறே உள்ளது.மாணவர்களும் படித்தோம் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நோக்குடன் இன்றைய சமுதாயத்தில் இருக்கிறார்கள் அவர்களுக்கு தாம் என்பது தவிர மற்றவை பற்றி கவலை இல்லை, இந்நிலை இப்படியே தொடர்ந்தால் வருங்கால சமுதாயம் என்னவாகுமென்ற சிறு அச்சம் எழுகிறது.     

    

மேலும்

நீர் இன்றி அமையாது உலகு

எனும் நிலை மாறி
நோயின்றி அமையாது
உலகாணது..ஶஶஶ

மேலும்

பொங்கல் கொண்டாட்டம்

விவசாய தமிழனுக்கு
தண்ணீர் இல்லாமல்
திண்டாட்டம்
தையே வாழ வழி கொடு
தமிழ் மண்ணுக்கு....

மேலும்

தோல்வியை நலம் விசாரிக்கும்

போது வெற்றி வீர்யம் பெற்று விவேகம் கொண்டு வீரநடைபோட
துவங்குகிறது...

மேலும்

ஏழையின் மூச்சை பறித்துக் கொண்டு ,
பணக்கார நாட்டில் ஓய்வெடுக்கிறது......கருப்புப்பணம்!!

மேலும்

பள்ளி வாசலில் தெரிந்தே காத்திருக்கிறேன்,
அப்பாவின் பணம் கொள்ளை போவதைப் பார்க்க ....அனுமதிச்சீட்டுடன் !!

மேலும்

மேலும்...

மேலே