barathwaj555 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  barathwaj555
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Aug-2016
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  3

என் படைப்புகள்
barathwaj555 செய்திகள்
barathwaj555 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2016 1:10 pm

நேகிழ்விழந்த ஆகாய முகிலும் என்னிடம் சொன்னது
முயலாதே சூரிய ஒளியை தடுக்க இயலாதென்று

நீ மரைந்தால் மழை இல்லை என்றேன்

சோர்வடைந்த கடல் மீன்களும் என்னிடம் சொன்னது
முயலாதே கரையை கடக்க இயலாதென்று

நீ நின்றால் கடலுக்கு உயிரில்லை என்றேன்

சோர்வடைந்த நெல் மணிகள் என்னிடம் சொன்னது
என் விவசாய நிலத்தை அழிக்காதே என்னால் வாழ இயலாதென்று

என்னால் பதில் கூற இயலவில்லை.

மேலும்

நிதர்சனமான வரிகள்.......அருமை தோழா இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்..... 04-Aug-2016 2:45 pm
கவிதை கற்பனை நன்றாக உள்ளது; ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன; பிழைகளை தவிர்க்க முயலவும்; வாழ்த்துக்கள்! 02-Aug-2016 5:28 pm
அழகான வரிகள். விவசாய நிலங்கள் இன்று கட்டிடங்களாய் மாறிக் கொண்டே இருக்கின்றது. மேலும் தொடருங்கள் கலைப் பயணத்தை வாழ்த்துக்கள் .... 02-Aug-2016 2:43 pm
மிகவும் நன்றாக உள்ளது 02-Aug-2016 1:27 pm
barathwaj555 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2016 1:07 pm

தேடி ஓடுகிறேன் கானல் நீர் என மறையும் என் நம்பிக்கையை

என் நாடி அனைத்தும் ஓடும் ஆற்றல் தீரும் வரை ஓடினேன்
ஆகாயதிற்கு ஏணியாய் உள்ள மரத்தின் வேர்களுக்கிடையே ஓடினேன்

என் ஓட்டத்தின் முடிவை எதிர்பார்கத்திருக்கும் பருந்தின் பார்வையை பொருட்படுத்தாமல் ஓடினேன்

ஆனால் என் ஆற்றல் ஓயிந்தது,
என் கால்கள் சோர்ந்தது
மரணம் என் அருகில் வந்தது

தொலைவில் டமால் என்ற சத்தம்
அந்த பருந்தும் ஓய்ந்தது
என்னை துரத்திய புலியும் வீழ்ந்தது

அதன் மர்பில் பாய்ந்தது துப்பாக்கி குண்டு

மகிழ்ந்தது நான் மட்டும் தான்

தரையாவும் இரத்தத்துடன் மாய்ந்தது
இந்த இனத்தின் கடைசி உயிர்

மேலும்

barathwaj555 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2016 1:04 pm

இது என்ன புது உணற்வு

எல்லையில்லாத புவியின் இருளில்
சில்லென்னு ஒரு அழைக்குறல்

தலை நிமிற்ந்து தேடினேன்
கண் எட்டிய இடமெல்லாம் தேடினேன்
காணவில்லை.

அந்த குறலும் சாயிந்த பாடில்லை
என் தேடலும் ஓய்ந்த பாடில்லை

இறுதியில்
கண்டேன் அந்த குறல் மூலத்தை
நெகிழ்ந்தேன் அதை எழுப்பும் பாலனைக் கண்டு

முடிவற்ற விண்வெளியின் இருளை சிதைக்கும் கதிரவனின் ஒளியில் மின்னும் பூமியில
இருக்கும் என் நண்பன் என்னை அழைக்கிறான்.

நண்பனே நீ தனி மரம் அல்ல
கவலை வேண்டாம்

இப்படிக்கு வின்மீன்

மேலும்

அருமை 10-Aug-2016 8:30 pm
12-14 வரிகள் நீளமானவை கவிதாவின் அழகை குறைகின்றது போல் இருக்கிறது அவற்றை பிரித்து அமைத்தால் கவிதை சீராகும் அழகுபெறும் ;பொருள் படிந்த வரிகள் இன்னும் எழுதுங்கள் 07-Aug-2016 7:22 pm
கருத்துகள்

மேலே