kanaga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanaga
இடம்:  தேனி
பிறந்த தேதி :  19-Oct-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2019
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என்னைப் பற்றி...

இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணி எஞ்சியிருக்கும்
ஒரு தேசிய மயமாக்கப்பட்ட
வங்கியின் முதுநிலை மேலாளர்.

என் படைப்புகள்
kanaga செய்திகள்
kanaga - எண்ணம் (public)
28-Apr-2019 12:51 pm


    கவிதை - காதல் என்பது எது வரை?

தோற்ற பின்பே ஒரு காதல்
என்றென்றும் நிலைத்து நிற்கிறது
காதலர் உயிரோடிருப்பர் - ஆனால்
நடைப் பிணங்களாய்.

அவனுக்கு சிகரெட்,  மது
இவளுக்கு புலம்பல், வெறுத்தல்
எதுவும் தேவை இல்லை
மனங்களின் சங்கமமே காதல்.

அவரவர் கடமையை 
அந்திமக் காலம் வரை 
ஆற்றினால் போதும்
தாஜ்மஹால் தேவையில்லை.

உடம்பு அரிப்புக்கு
ஒருவன் கூட படுத்து
இயலாமையால் இன்னும்
பலருடன்  படுக்கையைப் பகிர்ந்து

ஏமாற்றினான் எனக் காதலையும்
கொச்சைப்படுத்தி உலகின் 
அனுதாபம் திரட்டுவோரே 
மானமிழக்குமுன் உலகு மறந்ததேன்?

- கே. கனகராஜ் 



மேலும்

kanaga - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2019 9:32 am

என்னை சார்ந்தாருக்கு அன்பாகவும், சாராதாருக்கு வெறுப்பாகவும் நடந்தால் அது ஒருதலைபட்சமானதே.

உங்களைப் போல் அந்த பரமாத்மாவும் ஒருதலை பட்சமாக நடந்தால் என்ன செய்வீர்கள்?

வெடிகுண்டுகளை விதைக்கிறீர்கள்.
அவற்றின் மேல் நடந்து உயிரிழப்போரால் நீங்கள் ஏதாவது பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

ஒவ்வொரு முறையும் மனிதன் அழிவுச் செயலை மனிதர்கள் மீதே பிரயோகிக்கும் போது அதை பலர் ஆதரிப்பதையும், பலர் எதிர்ப்பதைப் போல ஆதரிப்பதையும், சிலர் மட்டுமே எதிர்ப்பதையும் உண்மையான வாழ்க்கை நெறியை மனிதர்களுக்கு உணர்த்த முயல்வதையும் காண முடிகிறது.

மனிதர்கள் தங்கள் செயல்களால் அழிந்து கொண்டு கடவுளை குற்றஞ் சொல்லும் அறியாமை, இது

மேலும்

kanaga - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2016 2:54 pm

வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியும் ​ஆனந்தமும் , இன்பமும் திருப்பமும் ,ஏற்படுவது இயற்கை. இதனை நாம் உணர்ந்து செயல்பட்டால் , விளைவுகளும் நமக்கு பனித்துளியாகவே தெரியும் . ஒருவித அச்சத்துடன் வாழ்ந்தால் எதுவும் நமக்கு இமயமாகவே தெரியும் . திடமான , தெளிவான மனதுடன் இருந்தால் அனைத்துமே நமக்கு இம்மியளவுதான் .

​நான் பள்ளி காலத்திலும் , கல்லூரி வாழ்க்கையிலும் குட்டு வாங்கியதும் உண்டு .....பாராட்டுப் பெற்றதும் உண்டு. ​
அதிலும் ஒருசில வாழ்க்கையில் சுவடுகளாக இன்னும் நெஞ்சில் நிலைத்தும் உள்ளது. அனுபவங்களே நமக்கு பாடமாக அமைகிறது . இதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன் .


​பிறப்பும் இ

மேலும்

மிகவும் நன்றி சார் . ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப்பயணம் அவர்களின் வரலாற்று சுவடுகள் .பலரும் அதை நினைத்தும் பார்ப்பதில்லை திரும்பியும் பார்ப்பதில்லை . இது யதார்த்த வாழ்க்கையின் அடிப்படை உண்மை 28-Apr-2019 8:18 pm
மருத்துவர் கன்னியப்பன் தங்கள் வாழ்க்கைப் பயணம் பற்றி கூறினார்கள் தங்கள் வாழ்க்கைப் பயணம் - அனுபவச்சாரல்கள் - இன்று படித்தேன் வரலாற்று சுவடுகள் அழியா இடம் பெற்றுள்ளன தங்கள் ஆரோக்கியமான இலக்கிய பயணம் தொடர தமிழ் அன்னை ஆசிகள் 28-Apr-2019 4:23 pm
மிக்க நன்றி சார் .ஆம் ...அதற்குப் பிறகு எண்ணங்கள் சிதறி நினைவுகள் சற்று நீர்த்து , மாற்று பதிவுகளாக , கவிதைகளும் , அனுபவத்தின் குரல் என்றும் எனது நெஞ்சின் எதிரொலிகளை எழுத்துக்களாய் எழுத ஆரம்பித்தேன் . அவை 1 முதல் 100 வரை முகநூலில் எழுத ஆரம்பித்தேன் அநேகமாக இங்கும் அவை அனைத்தையும் பதிவு செய்துள்ளேன் என்றே நினைக்கிறேன் . நீங்கள் கூறிய பகுதிகள் இல்லை என்பதை நானே இப்போதுதான் அறிகிறேன் . எதையும் விடவில்லை நான் ஆனாலும் எப்படி இதில் விட்டுப்போனது என்று தெரியவவில்லை பார்க்கிறேன் . மிக்கநன்றி உங்கள் சுட்டிக்காட்டலுக்கு . உண்மைதான் நாங்களும் எங்கள் குடும்பமும் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் அவரின் பெயராலும் புகழாலும் தான் இன்றும் நாங்கள் வாழ்கிறோம் .மிகவும் அன்பார்ந்த நன்றி சார் மேலும் அடிக்கடி எனது உடல்நலம் பாதிக்கப்படுவதால் இடையில் அவ்வப்போது சற்று தொய்வு ஏற்படுகிறது என்பது உண்மை . 28-Apr-2019 2:52 pm
திரு. பழனி குமார் அவர்களுக்கு, இன்னும் 3 ஆண்டுகளே பணி எஞ்சியுள்ள ஓரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முதுநிலை மேலாளராக உங்களின் வாழ்க்கைப் பயணம் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து மகிழும் பேறு பெற்றேன். ஏன் 05.02.2016க்குப் பின் எதுவும் எழுதவில்லை? கட்டுரைகள் 1 முதல் 5, 21, 24 மற்றும் 28 என்னவாயின? தங்கள் தாத்தாவுக்கு பேரனாக அமைந்தது தங்களது பாக்கியம். எப்படிப்பட்ட தலைவர்கள், பிரபலங்களுடன் பழகியிறரு க்கிறீர்கள்?! -கே. கனகராஜ் 28-Apr-2019 11:18 am
கருத்துகள்

மேலே