அறியாமை நோய்
என்னை சார்ந்தாருக்கு அன்பாகவும், சாராதாருக்கு வெறுப்பாகவும் நடந்தால் அது ஒருதலைபட்சமானதே.
உங்களைப் போல் அந்த பரமாத்மாவும் ஒருதலை பட்சமாக நடந்தால் என்ன செய்வீர்கள்?
வெடிகுண்டுகளை விதைக்கிறீர்கள்.
அவற்றின் மேல் நடந்து உயிரிழப்போரால் நீங்கள் ஏதாவது பாதிக்கப்பட்டுள்ளீர்களா?
ஒவ்வொரு முறையும் மனிதன் அழிவுச் செயலை மனிதர்கள் மீதே பிரயோகிக்கும் போது அதை பலர் ஆதரிப்பதையும், பலர் எதிர்ப்பதைப் போல ஆதரிப்பதையும், சிலர் மட்டுமே எதிர்ப்பதையும் உண்மையான வாழ்க்கை நெறியை மனிதர்களுக்கு உணர்த்த முயல்வதையும் காண முடிகிறது.
மனிதர்கள் தங்கள் செயல்களால் அழிந்து கொண்டு கடவுளை குற்றஞ் சொல்லும் அறியாமை, இது தான் கலியுகத்தின் முக்கிய மூலதனமாக எங்கும் வியாப்பித்துள்ளது.
தாய் கர்ப்பத்துள் வாழ்ந்து கொண்டு, " எங்கே என் தாய்? அவள் இருக்கிறாளா? இல்லையா? கர்ப்பத்தைத் தாண்டி வெளியே ஒன்றும் கிடையாது. இருந்தால் பார்த்துவிட்டு வந்து சொல். ", என்று குழந்தை சந்தேகித்து குறுகிய வட்டத்திற்குள் விவாதத்தில் சாதித்து பத்து திங்களில் கர்ப்பத்தில் இருந்து வெளிவே வந்து தலைகீழாய் விழுவதைப் போல இறைவனுள் வாழும் நாமும் சிக்கி மரணிப்போம் அறியாமையில்.