கலைஞர் ஓர் அதிசயம்
கலைஞர் ஓர் அதிசயம் . 💐
தர்பார் அரசியிலை தகர்தெரிந்த தானைய தலைவன்
பாமரனுக்கும் அரசியல் கற்று கொடுத்த சீர்திருத்த தலைவன்
பட்டி தொட்டி எங்கும் அரசியல் பேச வைத்த ஜனரஞ்சக தலைவன்
கழக கண்மனிகளுக்கு என்றும் அன்பு தலைவன்.
இவர் பேசும் தமிழ் இளம் பெண் போல் அழகானது.
இவரின் அழகு தமிழின் வார்த்தை ஜாலம்
கண்களால் பல வித்தை புரியும்
இளம் மங்கையின் கண் இசைவு, கை அசைவு.
இவரின் பேச்சின் நடை அழகோ
இளம் நங்கையின் இடை அழகு
என்ன ஒரு வளைவு, என்னே ஒரு நெளிவு.
அற்புதம், அபாரம், அதிசயம் .
இவரின் தமிழ் ஆளுமையோ
அழுத்தம் திருத்தமாக மிக வலிமையாக
தங்கு தடையின்றி கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி .
அனைவராலும் ஈர்க்கப்பட்ட அந்த கரகரப்பு குரல்
இன்றளவும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வசீகர மாமந்திரம்.
ராஜதந்திரம், சமயோசித்த புத்தியில் சானக்கியனின் அண்ணன் .
நிர்வாக திறமையில் மஹாபாரதத்தின் கண்ணன்.
திட்டம் தீட்டுவதிலும், சட்டம் வகுப்பிலும் தொலை நொக்கு பார்வை
தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றும் குடியிருக்கும் நிறந்திர உதயசூரியன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வழி நடந்தவர்
அண்ணாவின் அன்பு தம்பி
கழகத்தின் நிரந்திர தலைவன்
பார் புகழும் தன்னிகரற்ற அரசியல் ஆசான்.
தமிழ் தாய் கண்டெடுத்த ஆக சிறந்த அதிசயம்.
- பாலு.