கவிக்குயில் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிக்குயில் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 17-Dec-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 417 |
புள்ளி | : 12 |
பேராசிரியர்
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
ஈரோடு
தானம்
இருக்கும் வரை
'நி' தானம்
இறந்த பின்
'நீ' தானம்
மாடர்ன்
மதி மழுங்க இம்மானிடத்தை
ஆக்கியது 'மாடர்ன்'
நம்பிக்கை இழந்து நேயம்
மறக்கச் செய்தது 'நவீனம்'
தொலை சிந்தனை தொலைத்து
சிறைப்படுத்தி வைப்பது 'தொலைக்காட்சி'
இங்கிதம் இல்லாத இச்சைகள்
இன்பமாக காட்டுவது 'இன்டர்நெட்'
அகிம்சை காட்டிய மண்ணில்
அமைதி நீக்கி வன்முறை
காட்டுவது 'திரைப்படங்கள்'
இதுதான் பண்பாடு பாடும்
பாரத மண்ணில் மானுடம்
மார்தட்டிக் கொள்ளும்
'மாடர்ன் உலகம்'
'அ'கரம்
அகவை அய்ந்தானது
'அ'கரம் என் மொழியானது
'அ'கரம் வழி உயிருடன்
மெய்யும் வந்து சேரவே
உயிரும் மெய்யுமாய்
தழைத்தது என் தாய்மொழி ..!
'அ'கரம் வந்த வாயிலே
அந்நியம் வந்து உதிக்கவே
உதிர்ந்து விட்ட 'அ'கரமோ
உளரல் ஆகிப் போனதுவே
உளரல் ஆகிய என்மொழி
உருவின்றி ஆகிடுமோ?
வன்முறைக் கலாச்சாரம்
இயறகை தந்தது உலகம்
நதிக்கரை தந்தது நாகரிகம்
அனுபவம் தந்தது அறிவு
கார்மேகம் தந்தது கருணை
மனிதத்தன்மை தந்தது மனிதநேயம்
பயிர் வாட தான் வாடிய
காக்கை குருவிகளை உறவாடிய
வந்தவர்களை வாழவைத்த
உலகினுக்கு பண்பாடளித்த
கருணைக்கும், காதலுக்கும்,பண்புக்கும் மதிப்பளித்த
நுண்ணறிவும் பகுத்தறிவும் நிறைந்த
மனிதர்களும் நூல்களும் வாழ்ந்த இம்மானுட
மண்ணில் இன்று எங்கிருந்து
வந்தது இந்த வன்முறைக் கலாச்சாரம்?
அப்பா
அறிவின் முதல் 'பா' 'அப்பா'
எனை தாங்கிய தாயின்
சுமை தாங்கிய பிதா...
உழைப்பில் உருகிய உடலை
என் அணைப்பில் ஆற்றிய ஆன்மா !
தந்தை என்ற தாரகம் யான் ஓத
விந்தையில் சிந்தை மிக மகிழ்ந்த சீமான்
காட்டிலும் மேட்டிலும் அவர் அலைய
வாழ்வையும் வளத்தையும் நான் அடைந்தேன்
குருதி வியர்வையை அவர் உதிர்க்க
கல்வியின் உயர்வில் யான் உதித்தேன்
அதிகாலை வயலில் அவர் குனிய
அகிலத்தின் வாழ்வில் நான் நிமிர ...!
பாடுபட்டு அவர் தந்த படிப்புக்கு
ஈடுபட்டு நான் தந்தேன் பதக்கம்
தங்க பதக்கம் ............
இப்பிறப்பின் அர்த்தம
மல்லிகை மண(ன)ம்
மல்லிகை மலர்ச் சூடி
மங்கலமாய் பொட்டிட்டு
தூய்மையாய் துகிலணிந்து
மயிலாக நடை நடந்து
குயிலொன்று வருகையிலே
வீதியிலே வீற்றிருக்கும்
கண்களெல்லாம் தனைநோக்க
மங்கை அவள் மனமெல்லாம்
மணவாளன் வருகை எண்ணி
காத்திருக்கும் வேளையிலே
மணவாளன் வந்துவிட்ட
வாசனையை மங்கை அவள் மனம் நுகர
பெண் கேட்டு வந்தவரோ
பொன் கேட்டு சென்றுவிட
மல்லிகையும் மணம் இழந்து
சருகாய் ஆனதுவே கன்னி அவள் மனம் போல ....!
மல்லிகை மண(ன)ம்
மல்லிகை மலர்ச் சூடி
மங்கலமாய் பொட்டிட்டு
தூய்மையாய் துகிலணிந்து
மயிலாக நடை நடந்து
குயிலொன்று வருகையிலே
வீதியிலே வீற்றிருக்கும்
கண்களெல்லாம் தனைநோக்க
மங்கை அவள் மனமெல்லாம்
மணவாளன் வருகை எண்ணி
காத்திருக்கும் வேளையிலே
மணவாளன் வந்துவிட்ட
வாசனையை மங்கை அவள் மனம் நுகர
பெண் கேட்டு வந்தவரோ
பொன் கேட்டு சென்றுவிட
மல்லிகையும் மணம் இழந்து
சருகாய் ஆனதுவே கன்னி அவள் மனம் போல ....!
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?