அகரம்
'அ'கரம்
அகவை அய்ந்தானது
'அ'கரம் என் மொழியானது
'அ'கரம் வழி உயிருடன்
மெய்யும் வந்து சேரவே
உயிரும் மெய்யுமாய்
தழைத்தது என் தாய்மொழி ..!
'அ'கரம் வந்த வாயிலே
அந்நியம் வந்து உதிக்கவே
உதிர்ந்து விட்ட 'அ'கரமோ
உளரல் ஆகிப் போனதுவே
உளரல் ஆகிய என்மொழி
உருவின்றி ஆகிடுமோ?