அப்பா

அப்பா
அறிவின் முதல் 'பா' 'அப்பா'
எனை தாங்கிய தாயின்
சுமை தாங்கிய பிதா...
உழைப்பில் உருகிய உடலை
என் அணைப்பில் ஆற்றிய ஆன்மா !
தந்தை என்ற தாரகம் யான் ஓத
விந்தையில் சிந்தை மிக மகிழ்ந்த சீமான்
காட்டிலும் மேட்டிலும் அவர் அலைய
வாழ்வையும் வளத்தையும் நான் அடைந்தேன்
குருதி வியர்வையை அவர் உதிர்க்க
கல்வியின் உயர்வில் யான் உதித்தேன்
அதிகாலை வயலில் அவர் குனிய
அகிலத்தின் வாழ்வில் நான் நிமிர ...!
பாடுபட்டு அவர் தந்த படிப்புக்கு
ஈடுபட்டு நான் தந்தேன் பதக்கம்
தங்க பதக்கம் ............
இப்பிறப்பின் அர்த்தம் தந்த
எந்தையே எந்தன் வாழ்வின் சிந்தை ...!