kumaravelu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kumaravelu |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 10-Nov-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
அறியாமை இருளில்
பலகீனப்பட்டுப் போன
மக்களுக்கு-
சிறுநெருப்பு பொறி
போன்ற விழிப்புணர்வு வெளிச்சம்
எனது படைப்பு
உடலினை உறுதிசெய்;
உயிராற்றலை பெருக்கு;
உலக வாழ்க்கையின் உன்னதம்
புரியாத பாமரர்க்கு-
விழிப்புணர்வுத் தொண்டு
செய் ......
அறியாமையால் அவதியுறும்
அப்பாவிகள் -
ஆரோக்கிய சுகமறிய.....
அர்ப்பணிப்பு உணர்வோடு
தொண்டுசெய் !
ஆன்மீகமும் மருத்துவமும்
இரண்டறக் கலந்த
ஞானியரின்....
அருள்நெறியோடு
தொண்டுசெய் !
உண்ணும் உணவில்
கவனம் கொள்ளவும் ;
உண்ணும் முறையில்
நினைவு கொள்ளவும் ;
நம் மூதாதையரின்-
வாழ்வியல் கோட்பாட்டை
நடைமுறையில் கொள்ளவும் ;
நீண்ட ஆயுள் -
மருத்துவமில்லாமல்
நிலைப்பதற்கு ....
தொண்டுசெய் !
தனிமனித ஒழுக்கம்
பேராசை மயக்கத்தில்
தடுமாறி -
அதர்மத்தின் மடியில்
சாய்வதா?
வாழ்க்கைச் சக்கரத்தின்
அறமென்னும் அச்சாணி
முறியுமளவிற்கு
சேகரித்த பொருளின்
சுமைதாளாமல்,
ஆயுள் வாகனமே
சேதமாகிப் போவதா?.....
சபலங்கள்
அசைபோடும் தீவனமாய் .....
பாவங்கள் -
படர்கின்ற கொடிமரமாய் .....
மனிதா!
அவநம்பிக்கையின்
கரங்களை பற்றிக்கொண்டு ,
ஆவேசமாய் ஓடுவது
அழிவுப் பாதைக்கா?
இந்த
அவசரயுகத்தில் நீ
தொலைந்ததை.....
அடையாளப்படுத்தி,
சுயவிலாசம்-
சொல்லட்டுமா!
காயப்படுத்தாமல்
உன்னை
ஆயத்தப்படுத்துவதற்கு
உத்தி சொல்லட்டுமா !
உள்ளும் புறமும்
அழுக்கினை நீக்கி
உத்வேகம் பெற்ற