தொண்டு

உடலினை உறுதிசெய்;
உயிராற்றலை பெருக்கு;
உலக வாழ்க்கையின் உன்னதம்
புரியாத பாமரர்க்கு-
விழிப்புணர்வுத் தொண்டு
செய் ......

அறியாமையால் அவதியுறும்
அப்பாவிகள் -
ஆரோக்கிய சுகமறிய.....
அர்ப்பணிப்பு உணர்வோடு
தொண்டுசெய் !

ஆன்மீகமும் மருத்துவமும்
இரண்டறக் கலந்த
ஞானியரின்....
அருள்நெறியோடு
தொண்டுசெய் !

உண்ணும் உணவில்
கவனம் கொள்ளவும் ;
உண்ணும் முறையில்
நினைவு கொள்ளவும் ;
நம் மூதாதையரின்-
வாழ்வியல் கோட்பாட்டை
நடைமுறையில் கொள்ளவும் ;
நீண்ட ஆயுள் -
மருத்துவமில்லாமல்
நிலைப்பதற்கு ....
தொண்டுசெய் !

எழுதியவர் : குமாரவேலு (25-Nov-14, 10:15 am)
சேர்த்தது : kumaravelu
பார்வை : 117

மேலே