nararitha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : nararitha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 2 |
அயல்நாடு வாழ் தமிழர்களே!!!
அம்மாவின் அருமை பெண்ணிற்கு
புகுந்த வீட்டில் தான் புரியுமாம் - நமக்கு
தமிழின் அருமை
அயல் நாட்டில் தானே புரிகிறது !!!
தாமதமாகி விட்டாலும் தருணம் இதுவென்று
தொடங்குவோம் தமிழில் பேசி பழக - இல்லையேல்
வாழ்க்கை நெறியை கற்றுகொடுத்த
வள்ளுவனையும் அவ்வையாரையும் - நம்
வாரிசுகள் என்று தான் அறிந்து கொள்வர்?
தமிழ் என் மூச்சு என்று முழக்கமிட்டான்
அன்று முண்டாசு கவிஞன் "பாரதி "
இன்றோ பேசுவதற்கு கூட நாம்
தமிழை மறந்து விட்டோமே !!!
உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும்
நம் வாழ்க்கை நிர்ணயிக்க படலாம் - ஆனால்
தாய்மொழி "தமிழே " என்பதில் நாம்
நிச்சயமாயிருப்ப
பண்படா மக்களால் பாழ்படும் சமுதாயமே
என் நெஞ்சு பொறுக்குதில்லையே....
அம்மாவின் அரவணைப்பை தொலைத்து
ஆயாவின் மிரட்டலே தாலாட்டாய் கொண்ட
பிஞ்சு குழந்தைகளை காண்கையில்....
ஓடியாடி விளையாடும் பருவத்திலே
தேடிதேடி கூடுதல் வகுப்புக்கு திறமையை
கூட்டவென்று சுமக்கவொண்ணா புத்தகபையுடன்
செல்லும் மழலையரை காண்கையில்....
இருமனமொத்து வாழும் திருமணத்தின் பந்தம் புரியாமல்
விவாகரத்து நாடி வழக்காடு மன்றம் செல்லும்
அவசரகதியில் அறிவை தொலைத்த தம்பதியரை காண்கையில்...
அந்நிய மோகம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கபடும்
தாய்மொழி மறந்த பேரக்குழந்தையோடு உரையாடவே
முடியாமல் தவிக்கும் தாத்தா பாட்டிகளை காண்கையில்...
பண்படா மக்களால் பாழ்படும் சமுதாயமே
என் நெஞ்சு பொறுக்குதில்லையே....
அம்மாவின் அரவணைப்பை தொலைத்து
ஆயாவின் மிரட்டலே தாலாட்டாய் கொண்ட
பிஞ்சு குழந்தைகளை காண்கையில்....
ஓடியாடி விளையாடும் பருவத்திலே
தேடிதேடி கூடுதல் வகுப்புக்கு திறமையை
கூட்டவென்று சுமக்கவொண்ணா புத்தகபையுடன்
செல்லும் மழலையரை காண்கையில்....
இருமனமொத்து வாழும் திருமணத்தின் பந்தம் புரியாமல்
விவாகரத்து நாடி வழக்காடு மன்றம் செல்லும்
அவசரகதியில் அறிவை தொலைத்த தம்பதியரை காண்கையில்...
அந்நிய மோகம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கபடும்
தாய்மொழி மறந்த பேரக்குழந்தையோடு உரையாடவே
முடியாமல் தவிக்கும் தாத்தா பாட்டிகளை காண்கையில்...