preyanka - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  preyanka
இடம்
பிறந்த தேதி :  02-Jul-1975
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2015
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
preyanka செய்திகள்
preyanka - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 1:12 pm

அரும்புகள்

இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்து
குலம் தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகி
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ் சிறு அரும்புகளாய்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்து வந்து
ஆற்றலால் சிறந்து நின்று
மெச்சி ஊரார் தானும் புகழ
பெற்றோர தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலை அவர் முன்னே.
- சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
தருமபுரி.

மேலும்

கருத்துகள்

மேலே