அரும்புகள்

அரும்புகள்

இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்து
குலம் தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகி
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ் சிறு அரும்புகளாய்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்து வந்து
ஆற்றலால் சிறந்து நின்று
மெச்சி ஊரார் தானும் புகழ
பெற்றோர தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலை அவர் முன்னே.
- சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
தருமபுரி.

எழுதியவர் : சித்ரப்ரியங்கா (17-Nov-15, 1:12 pm)
சேர்த்தது : preyanka
Tanglish : arumpukal
பார்வை : 70

மேலே