பாசம் தேடும் பறவை
பாசம் என்னும் நிழல் தேடி நான் அலைந்தேன்....
உறவுகள் என்னும் மரங்கள் என்று உங்களைத் தேடி!
நான் ஒட்டிவர ஒட்டிவர...
உங்கள் கரங்கள் என்னை வெட்டிவிடவே குறிக்கோளாய்...
கண் நிறைந்த கணவன் எனக்கு...
கண்ணியமாய் மழலை இரண்டு...
பஞ்சம் தீர்க்க பணமும் உண்டு...
என்ன பாவம் செய்துவிட்டேன்....
பாசம் மட்டும் விதிவிலக்கு!
பிறந்த சொந்தம் பிணைந்திருக்க...
என்னம் கோடி மனதில் உண்டு...
எத்தனையோ கோவில்களில் வேண்டுதலும் அதற்கு உண்டு!
நித்தம் நித்தம் சண்டையென்றால்....
நான் நிம்மதியாய் வாழ்வதெப்போ...
பாசம் வைத்த ஒன்றுதானோ நான் வாழ்வில் செய்த பெரிய தப்போ???
மங்கை என்னுள் இன்றும் உண்டு...
தாய் தந்தை பாசம் ஏக்கம் என்னுள்...
பிரிந்திடவா வளர்த்துவிட்டாய்..
நான் பிணம் என்றா நினைத்து விட்டாய்!
அண்ணனவன் மனதினிலே அணுவளவும் பாசமில்லை....
தம்பியவன் பெயரளவில் -அங்கே என் மேல் நேசமில்லை!
பிரிந்ததினால் இன்று மறுபடியும் பிறந்துவிட்டேன்...
சோகமதை என் வாழ்வினிலே இன்று முதல் துறந்து விட்டேன்!
நான் பாசம் தேடும் பறவை பறந்து செல்கிறேன்...
வேசம்மிகு என் உறவுகளை என் மனதில் இருந்து எறிந்துவிட்டு...
விடைகொடு என்தாய் உறவே...
இந்த விதை விருட்டசமாகி உங்களுக்கு பாச நிழல் கொடுக்க!
- உறவை பிரிந்த பெண்ணின் ஏக்கம்