விஞ்ஞானம்
விஞ்ஞானம் இஃது மனிதைனின் ஏழாம் அறிவு
மெய்ஞானம் காண உதவும் புதிய பகிர்வு
காசுக்காக விற்கப்படும் காற்றாலைகள்
கதிர்வீச்சைப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள்
புதிதுபுதிதாய் கண்டுபிடிக்கப்படும் ஆக்கக்கூறுகள்
சாமானிய மனிதர்களின் சகாப்பதம் - இது
சாதாரண நிலையில் சாதனை ஒப்பந்தம்
சிறியதாய் செலவிடப்படும் முயற்சிகள்
அதன் பலனாய் உருவாகும் மகிழ்ச்சிகள் (விஞ்ஞானம்)
விஞ்ஞானம் இஃது ஆய்வு என்னும் தாய்
பல இன்னலின் நடுவே பெற்றெடுத்த ஆதாரப்பிள்ளை
விஞ்ஞானம் இஃது காத்திருந்து எழுதப்பட்ட புதிய கவிதை
ஒவ்வொரு மனிதனிலும் உதித்திடும் உரிய விதை
தொலைநோக்கியும், தொலைக்காட்சியும் - எம்
விஞ்ஞானத் தாயின் தத்துப்பிள்ளைகள்
விஞ்ஞானம் இஃது பண்பாற்றும் முறைஇல்
புதிதாய் உருவாக்கிய புதிய பதார்த்தம்
இதுவே நம் வாழ்வில் அர்த்தமாய் மாறிய எதார்த்தம்
சில்லறையாய் கண்டுபிடிக்கப்பட்ட சிறுசிறு கண்டுபிடிப்புகள்
அனைவரும் உதவும் எம் விந்தைகள்
வியாபார உலகில் இஃது ஒரு ஆச்சரியக்குறி (!)
விசால உலகில் விடையரியப்படாத கேள்விக்குறி (?)
பூச்சாண்டிக் காட்டும் நரிகளின் வாளை ஒட்ட நறுக்கவே
ஏட்டில் பொறித்து அளித்திடுவோம்
அகரமே முதல எழுத்தின் அகரமே
திக்கெட்டும் தீண்டவொண்ணா சிகரமே எம் விஞ்ஞானம்....!!!