உரிமைகள் பறிக்கப்படும்-7

நீ
பதவி எனும் மோகத்தில்
உந்தன் இருக்கையின்
கடமையை மறக்கும் போதும்........

நீ
அகங்காரம் எனும்
ஆணவத்தால் உந்தன்
கண்ணியம் கரையும் போதும்.....

நீ
சாதி-மத பேதம்
கொண்டு உந்தன்
கட்டுபாட்டை கடக்கும் போதும்......

தனிமனித வளர்ச்சி
தடைபட்டு நம்
நாடு வல்லரசாகும்
உரிமைகள் பறிக்கப்படும் –உன்னால்
என்பதை மறவாதே !.....

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (17-Nov-15, 2:15 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 94

மேலே