shruthi - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : shruthi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 2023 |
புள்ளி | : 361 |
pudhu kavithai pudidaai thodanguhiraen...
உன்னோடு சேர்ந்திருந்த
உண்மை நட்பை
உயிரால் மதித்தும்
மயிராய் மிதித்தாய்...
என்னோடு சேர்ந்திருந்த
இயல்பான சிரிப்பை
கூட சிரித்தும்
குழி தோண்டிப் புதைத்தாய்...
நம்மோடு வாழ்ந்திருக்கும்
நேரம் பலவெல்லாம்
நகர்ந்து போவதையும்
நாசுக்காய் சரி செய்வாய்...
எண்ணிறைந்த கவலைகளைச்
சுமக்கும் சுமையை
இறக்கி வைக்க
என் அருகே நீ வருவாய்...
மூச்சில் கலந்த பின்
பேச்சு எதற்கு என்று
திரும்பினாயோ?
நினைவெல்லாம் நான் இருக்க
நேரே பார்க்காமால்
போனாயோ?
உன்னுள்ளே நான் கலந்ததால்
கலங்க மாட்டேன் என
நினைத்தாயோ?
என் உள்ளம் உனை நாடும்
விந்தை விளையாட்டும்
புரியாதோ?
வலி தாங்கும் உள்ளம்- இனி
விதி மாறும் முறைகளைச்
செய்வாயோ?
தடம் மாறும் என் எண்ணம்
தடை தாண்ட என்னை நீ
தாங்குவாயோ?
நீ சொல்லும் சொல்லுக்கும்
பார்க்கும் பார்வைக்கும்
சிரிக்கும் அழகிற்கும்
தவம் இருக்கும் மனதை
ஊசியால் குத்தி சோதிப்பதும் ஏனோ?
சல்லடையாய்ப் போன நெஞ்சம்
சஞ்சாரம் செய்வதென்னவோ
உன் நாமமும் உன் நிழலும் தான்...
வந்து சேர்ந்துவிடு சீக்கிரமாய்
வலி தாங்கும் விதி மாற்ற...
உன் நினைவிலே உறைந்திடும்
நிலைகுத்தின பார்வைகள்...
என் நெஞ்சிலே நிறைந்ததால்
கண் சொருகின மயக்கங்கள்...
மென்று விழுங்கின எச்சிலும்
கொண்டாடின என் காதலை...
எத்தனை நாள் இந்த ஏக்கமோ-
விடியலைத் தேடும் படையல்கள்...
பணம்!
இது பகிருமே வசதியும்! வனப்பும்!
ஏன் வா்ணஜாலமும்!
பணம் இதை வசப்படுத்த வாய்ப்பு தேடும் நம் இனம்!
இழக்குதே நல்குணம்!
பணம்! நல்குமே தலை கனம்!
காட்டுமே அக குணம்!
பணத்தின் மீதான பாசம்!
இதற்காக எத்துனை வேஷம்! துவேஷம்!
வாழ்கைக்கு தேவை பணம்!
ஆனால் வாழ்க்கையின் தேவை நல்ல மனம்!