வேண்டும் நீ
உன்னோடு சேர்ந்திருந்த
உண்மை நட்பை
உயிரால் மதித்தும்
மயிராய் மிதித்தாய்...
என்னோடு சேர்ந்திருந்த
இயல்பான சிரிப்பை
கூட சிரித்தும்
குழி தோண்டிப் புதைத்தாய்...
நம்மோடு வாழ்ந்திருக்கும்
நேரம் பலவெல்லாம்
நகர்ந்து போவதையும்
நாசுக்காய் சரி செய்வாய்...
எண்ணிறைந்த கவலைகளைச்
சுமக்கும் சுமையை
இறக்கி வைக்க
என் அருகே நீ வருவாய்...