shivani - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  shivani
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Aug-2017
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  9

என் படைப்புகள்
shivani செய்திகள்
shivani - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2019 2:12 pm

உன்னிடம் மயங்குகிறேன் - Part 9
புயலின் சீற்றம்
பொழுது விடிந்து விட்டது. காற்று பலமாக வீசியது. லேசாக மழையும் பெய்து கொண்டிருந்தது. மழையின் சப்தத்தை விடக் காற்றின் சப்தம் மேலோங்கி உண்டான ”ஜோ” என்னும் ரீங்காரத்தால் காதே அதிர்ந்தது. கேட்டது. சுந்தரி கடிகாரத்தை நோக்கினாள். காலை மணி ஐந்து. இவ்வளவு சப்தத்திலும் ராஜேந்திரன் இன்னும் எழுந்திருக்கவில்லை. இழுத்துப் போர்த்துக் கொண்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் ஏழு மணிக்கு மேல்தான் விழிப்பான். அன்று அவள்தான் எழுந்து சமையல் செய்ய வேண்டும். இன்னும் பத்து நிமிடம் கழித்து எழுலாம் என்று கண்ணை மூடிக் கொண்டு சிந்தனை செய்யத் தொடங்கின

மேலும்

shivani - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2019 2:38 pm

உன்னிடம் மயங்குகிறேன் பாகம் 8

அவ எப்படியாவது போகட்டும் ! !

மொபைல் போன் வந்தவுடனே பூரணி உடனே போய் சுந்தரியை போய்ப் பார்க்க வேண்டுமென முடிவு செய்தாள். . அவள் கணவர் சாயந்தரம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் போய் பார்க்க வேண்டுமென நினைத்தாள்.
பூரணி எல்லா வேலையையும் முடித்து விட்டு யூடியுபில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது மதியம் மணி இரண்டு. காலிங் பெல் சப்தம் கேட்கவே யாரென்று போய்க் கதவைத் திறந்தவள் திகைப்புடன்,” நீங்களா?” என்று வியந்தாள். . வந்தது அவள் கணவர்தான்.
“ தீடிரென்று சீக்கிரம் வந்து விட்டீர்கள் ? உடம்பு சரியில்லையா ?
அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்று இரவு கோவைக்குப் போக வ

மேலும்

shivani - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 1:58 pm

உன்னிடம் மயங்குகிறேன் - Part 7
கண் கெட்ட பிறகு ...
சுந்தரி, ரங்கநாதன் தன்னை அலைப்பேசியில் தொடர்பு கொள்ள அடிக்கடி முயல்வதைப் பற்றியும் அவனைத் தான் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதைப் பூரணியிடம் கூறினாள்.
”எல்லாம் பாழாய்ப்போன இந்த வாட்ஸ் அப்பால் வந்த வினை. எல்லா ஆண் நண்பர்களும் மோசம் என்று சொல்ல மாட்டேன். அவர்களுக்கு இடம் கொடுக்கும் நாமும் ஒரு காரணம். வீட்டு முகவரியை மட்டும் எந்த காரணத்துக்கும் ஆண் நண்பரிடம் கொடுக்காதே. நீயோ கல்யாணம் ஆனதை வெளிப்படையாய் சொல்வதில்லை. உன் வீட்டு முகவரி தெரிந்திருந்தால் தேடிக்கொண்டு வந்துவிடுவார்கள். ஆண்களிடம் பழகும்போது ஜாக்கிரதையாய் இரு” என்றாள்.
”நா

மேலும்

shivani - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2019 3:32 pm

உன்னிடம் மயங்குகிறேன் - பாகம் 6
6. எனக்குப் பிடிக்கல
ரங்கநாதனைத் தன்னுடைய வாட்ஸ் அப் காண்டாக்ட்லிருந்து சுந்தரி எடுத்து விட்டாள். இனிமேல் அவன் அவளிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்து விட்டாள்.
அவன் அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான். முடியவில்லை. அவனுக்கு அவளுடன் முன்பு அலைபேசியில் பேசியது நினைவுக்கு வந்தது. ”ஞாயிற்றுக் கிழமை உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா? நீங்கள் எப்போது ஃபிரியாக இருப்பீர்கள்” என்று கேட்டதிற்கு அவள், “நான் ஞாயிற்றுக் கிழமை எப்போதும் ஃபிரிதான். காலையில் மட்டும் கொஞ்சம் நேரங்கழித்து எழுந்திருப்பேன். நீங்க எப்போ வேணுமானாலும் காண்டக்ட் பண்ணலாம்.”

மேலும்

ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு. 11-Sep-2019 8:02 am
shivani - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 8:05 pm

அகவல்களில் பாமுனையும் ஆவலில்
தகவல்களை தாரைவார்க்காதீர்- தரமற்ற
இகல்வுகளை இடித்துரைத்து- மெய்
நகல்களுக்கு அறைகூவல் விடுங்கள்

அந்தாதிகள் சமைத்திட அடிசீர் தேடி
அங்கதங்களை அசாத்தியமாய் கூட்டி- உயர்
ஆதிபகவனுக்கு இணையாய் ஏகாதிபதிகளைப் பாடி- வரும்
சந்ததிகள் சிந்தையில் சங்கதிகளை சிதைக்காதீர்

விருத்தங்கள் வேண்டாம் சமூக வருத்தங்களைப் பாடுங்கள்
பிரபந்தங்கள் வேண்டாம் பிரிவினை வாதங்களை சாடுங்கள்
கலம்பகங்கள் வேண்டாம் காலத்தோடு காவியம் படையுங்கள்
யாப்புகள் வேண்டாம் புரட்சி யாகத்தீயை எழுப்புங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

உள்ளத்தின் மரபையே பேண மறந்த இந்த உலகம் நியதிகளில் எப்படி மரபை பேணும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:06 am
உங்கள் கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுதுங்க - சிவானி 19-Sep-2017 10:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே