மரபுகள் வேண்டாம்

அகவல்களில் பாமுனையும் ஆவலில்
தகவல்களை தாரைவார்க்காதீர்- தரமற்ற
இகல்வுகளை இடித்துரைத்து- மெய்
நகல்களுக்கு அறைகூவல் விடுங்கள்

அந்தாதிகள் சமைத்திட அடிசீர் தேடி
அங்கதங்களை அசாத்தியமாய் கூட்டி- உயர்
ஆதிபகவனுக்கு இணையாய் ஏகாதிபதிகளைப் பாடி- வரும்
சந்ததிகள் சிந்தையில் சங்கதிகளை சிதைக்காதீர்

விருத்தங்கள் வேண்டாம் சமூக வருத்தங்களைப் பாடுங்கள்
பிரபந்தங்கள் வேண்டாம் பிரிவினை வாதங்களை சாடுங்கள்
கலம்பகங்கள் வேண்டாம் காலத்தோடு காவியம் படையுங்கள்
யாப்புகள் வேண்டாம் புரட்சி யாகத்தீயை எழுப்புங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-Sep-17, 8:05 pm)
பார்வை : 95

மேலே