thamizthenee - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  thamizthenee
இடம்:  Chennai - India
பிறந்த தேதி :  01-Jul-1947
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2012
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என் புனைப்பெயர் தமிழ்த்தேனீ,இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி. நான் ஒரு நடிகன் , எழுத்தாளன்

என் படைப்புகள்
thamizthenee செய்திகள்
thamizthenee - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2018 12:54 pm

" கற்பனை சுகங்கள் “ கதை

நடுவிலே ஒரு கயிற்றுக் கட்டில் அதன் மேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு பார்வையை சுழலவிட்டார் தியாகேசன்.

பிரும்மாண்டமான தோட்டம் பண்ணை ஒரு பக்கம் பச்சைப்பசேல் என்று பசுமையாகக் தொடர் வண்டி போல காட்சி அளிக்கும் வரிசையான வளமான தென்னை மரங்கள்

சற்றே பார்வையைத் திருப்பினால் கொத்துக் கொத்தாய் காய்த்து பழுத்து தொங்கும் மாங்கனிகள் உள்ள மாந்தோப்பு அப்படியே பலாமரம் கொய்யா மரம் மாதுளை , முந்திரிமரங்கள் அங்கே இருந்து கூவும் கிளிகளின் குயில்களின் இனிமையான கானம்

தென்றலாய் வருடும் காற்று எக்காலத்திலும் வற்றாத வண்ணம் கோமதி அம்மனின் அருளோடு அமைந்த பிரும்மாண்டக் கிணறு அதிலிருந்து

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Jul-2018 7:01 pm
thamizthenee - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2017 1:05 pm

" சாதனை வேர்கள் "

வேகாத வெய்யில்னு சொல்றாங்க சென்னையிலே மனுஷனே வேகற வெய்யில், அப்படிப்பட்ட வெய்யிலில் போய் காய்கறிகள் , பழங்கள் , கருவேப்பிலை பச்சை மிளகாய் எலுமிச்சம் பழம், தொக்கு போட மாங்காய், தினசரி ஊறுகாய் போட மாங்காய், ஆவக்காய் மாங்காய் போட ஒரு வகை மாங்காய், அதைத்தவிர மாவடு, இஞ்சி எல்லாத்தையும் பாத்துப் பாத்து வாங்கி வியர்த்து வழிந்து அதைத் துடைக்கக் கூட முடியாமல் எல்லவற்றையும் உள்ளே கொண்டு வந்து வைத்தார் சபேசன்
அவர் மனைவி இந்தாங்க தண்ணீர் குடிங்க அப்பிடியே இந்த வியர்வையை துடைச்சிக்கோங்க ஜலதோஷம் பிடிக்கும் என்றபடி தண்ணீரை நீட்டினாள் .அதை வாங்கிக் குடித்துவிட்டு. அப்

மேலும்

thamizthenee - எண்ணம் (public)
31-Mar-2017 4:33 pm                       " குருவும் சீடனும் " 

சீடன்  :குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்   
குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும்
சீடன் :   உள்ளே பார்க்க  எப்படி பயிற்சி எடுக்க வேண்டும்   குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும்    
சீடன் :  அப்படியானால் ஆலையம் தொழவேண்டுமென்கிறீர்களா 

குரு : ஆலையம் தொழலாம்  ஆனால்  தெய்வத்தைக் காண வேண்டும்   
சீடன் :   தெய்வத்தை  எப்படிக் காண்பது    குரு :  விக்ரகத்தின் மூலமாக  காணலாம்     அப்பு வாயு தேயு ப்ரித்வி ஆகாயம்  என்கின்ற  வெறும் பஞ்சபூதங்களாகிய  நீர்  நெருப்பு நிலம் காற்று  ஆகாயம் ஆகியவைகளிலும்  காணலாம்  அது உன்னுடைய  மன முதிர்ச்சியைப் பொறுத்தது   
சீடன் :  அப்படியானால் காணும் பொருட்கள் யாவிலும்  இறைவனைக் காணும்  அளவுக்கு  மனமுதிர்ச்சி அடைய   என்ன செய்ய வேண்டும்   
குரு :  உன்னை உணரவேண்டும் உன்னை  உணர உள்ளே பார்க்க வேண்டும்   
சீடன் :  மீண்டும் தொடங்கிய  இடத்துக்கே வந்துவிட்டீர்களே   குருதேவா  சற்றே விளக்கமாக சொல்லக் கூடாதா   
குரு :   தொடங்கிய இடத்துக்கே  வருவதுதான் தெய்வம்  ஆதி அந்தமில்லாமல் ஒரு புள்ளி என்றில்லாமல் அனைத்து புள்ளிகளிலும் இணைவதே  தெய்வம்  அதனால்தான்  ஆதியும் அவனே அந்தமும் அவனே என்கிறார்கள்  விஷயம் அறிந்தவர்கள்    
சீடன் :  அப்படியானால் என் போன்ற  சாமானியர்களுக்கு  இறையை உணர   அல்லது எங்களை உணர  வேறு வழியே இல்லையா  குருதேவா   

குரு :  இருக்கிறது சீடனே  பக்தி மார்கத்தில்  மர்க்கட நியாயம் மார்ஜால  நியாயம் என்று இருவகையை சொல்கிறார்கள்  .  மர்க்கடம் என்றால்  குரங்கு  , குரங்கு  எப்போதுமே  குட்டிகளைப் பற்றிக் கொள்ளாது ஆனால் குட்டிகள்  குரங்கைப் பற்றிக் கொண்டே இருக்கும்   பற்றையதை விட்டுவிட்டால் குரங்குக் குட்டி  கீழே விழுந்துவிடும் . ஆனால்  மார்ஜால நியாயம் என்பது  என்ன தெரியுமா மார்ஜாலம் என்றால் பூனை  பூனை எப்போதும் தன் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டே  இருக்கும்   எப்போதும் கூடவே இருந்து அந்தக் குட்டிகளுக்கு  எழுந்து நடக்க  ஓட  எகிறிக் குதிக்க உணவை வேட்டையாட  கற்றுக் கொடுக்கும்  அதுபோலத்தான் .  இறைவனும் இரண்டு விதமானவன்   

சீடன் :  என்ன  குருவே  இறைவன் இரண்டு  விதமானவனா  அதெப்படி   குரு :   நீ ஏற்கெனவே கேட்டாயே  என்னை நான் எப்படி உணர்வது  என்று    அதற்கு ஒரு எளிதான வழி ஒன்று இருக்கிறது  அது உன்னிலிருந்து நீயே இரண்டாகப் பிரிந்து  உன்னையே நீ கண்காணிப்பது ,    த்வைதம் அத்வைதம் என்று சொல்வார்கள்  ஒன்றுதான்  இல்லை இரண்டு   ஆனால்  இரண்டுமே ஒன்று  என்று  அது போலத்தான்   
சீடன் :  அதெப்படி முடியும்   குரு :   கண்ணாடி அறையிலே  நீ இருக்கும் போது உன்னுடைய  பல பிம்பங்கள் தெரிகிறது அத்தனையும் வெவ்வேறா  எல்லாம் நீதானே  அது போலத்தான்  நீ இரண்டாகப் பிரிந்தாலும் அல்லது பலவாகப் பிரிந்தாலும் அல்லது  ஆயிரம் கோடி அணுக்களாகப் பிரிந்தாலும்  அது நீதானே  உன்னிலிருந்து பிரிந்தவைதானே  அது    

சீடன் :   அது சரி  ஆனால்  இறை பிரிந்தால் என்ன ஆகும்  ஒருவன் சிவன் என்கிறான் ஒருவன் விஷ்ணு என்கிறான்  யாரை நம்புவது
   
குரு :   நீ யாரை நம்புவது  என்று குழம்பாதே  நீ யாரை நம்பினாலும் அவன்தான் இறைவன். அவன் சிவன்  விஷ்ணு  என்கிற பலவடிவங்களில்  இருந்தாலும்  எல்லாம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்துவிட்டால் அதன் பின்  உன் குழப்பங்கள் தீர்ந்துவிடும். ஆனால் யாரை  நமபக் கூடாது  என்று முதலில் தெரிந்துகொண்டால்  அதன் பின் யாரை நம்புவது என்று எளிதாகப் புரிந்துவிடும்.   

சீடன் :  குருவே ஒவ்வொருவர் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகிறார்களே அதற்குண்டான விதிமுறைகள் மாறுகின்றனவே  ஒருவன் சொல்கிறான் கடவுளுக்கு உருவம் கிடையாது  என்று இன்னொருவன்  உருவம் உள்ளவன்தான்  கடவுள் என்கிறான். விக்ரக  வழிபாடு கூடாது என்கிறான் ஒருவன்  விக்ரகத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபடுவதே சிறந்தது என்கிறான் மற்றொருவன்   
குரு :   சீடனே நீயும் மற்றவர்களும்  நானும் போய்ச்சேருமிடம்  ஒன்றுதான்  என்பதை அறிவு பூர்வமாக ஆத்ம பூர்வமாக ஒப்புக்கொண்டால்  எல்லாம் விளங்கிவிடும்.    போய்ச்சேருமிடம் ஒன்று என்றால் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  இரு சக்கர வாகனத்திலோ  காரிலோ விமானத்திலோ  போகிறார்கள் ஆனால் போய்ச்சேருமிடம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்து பார்   இந்த  மதங்கள் என்பது வெறும் வாகனங்கள்தான். நாம் எப்போதாவது  வாகனத்தில் சென்று ஓரிடத்தை  அடைந்து விட்டால் அந்த  வாகனத்தையும் போகுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டா அலகிறோம் இல்லையே  அதுபோலத்தான் மதம் என்பதும் அதிலே ப்ரயாணம் செய்யலாம் ஆனால் தூக்கிக் கொண்டு  அலையக் கூடாது   

சீடன் :   எப்போது நான் என்னை உணர்ந்து  இறையை உணர்ந்து  குழப்பம் நீங்கித் தெளிவு கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை குருவே   

குரு :   சீடனே  நீயும் இறையும் வெவ்வேறு  என்று எண்ணுகிறாய் அப்படி அல்ல  என்பதை உணரத்தான் உன்னை உணர் என்றேன் , அதனால்தான் அணுவைச் சத கூறிட்ட அணுவிலும் உளன்  என்கிறார்கள்  இறைவனை .  ஆகவே நீ உன்னை உணர்ந்தால் இறையை உணரலாம்  . இறையை உணர்ந்தால் உன்னை உணரலாம்  அதன் பின் இறையும் நீயும் வெவ்வேறல்ல  என்பதையும் உணரலாம் 
சீடன் :   குருவே கடைசியாக ஒரு கேள்வி  நான் என்னை உணர்கிறேனோ இல்லையோ  இறையை உணர்கிறேனோ இல்லையோ  குறைந்த பக்‌ஷம் என் கூடவே இருந்து காட்சிதரும் உங்களை உணர  நான் என்ன  செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்   சீடனே இறையும் நீயுமே வேறில்லை என்கிறேன்  என்னை உணர  முயற்சிக்கிறேன் என்கிறாயே  நீயே நான் நானே நீ  புரிகிறதா    இன்னும் புரியவில்லை என்றால்  முதலில்  உன்னை உணர்   
சீடன் :  குருவே  எனக்கு மயக்கமாக வருகிறது    
குரு :    குழம்பினால்தானே தெளிவு வரும்  அதனால் சீக்கிரம் நீ தெளிந்துவிடுவாய்   
அன்புடன் 
தமிழ்த்தேனீ     

மேலும்

thamizthenee - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 1:44 pm

“ கல்வி என்பது”


மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.
மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல விளையாட்டு நல்ல உடற்பயிற்சி நல்ல கலைகளை வளர்த்துக் கொள்ளும் திறமை . என்று நல்லவைகளையே போதித்து அவைகள

மேலும்

thamizthenee - கவிஞர் பெருவை பார்த்தசாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 7:17 pm

நாட்டுக்காக, மொழிக்காக தொண்டாற்றிய தலைவர்கள் மற்றும் சான்றோர்களைக் கெளரவிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை, தன்னலமற்ற தொண்டுகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், மணிமண்டபங்களை தமிழக அரசு உருவாக்கி பராமரித்து, அரசு விழாக்களை நடத்தி பெருமை சேர்த்து வருவது நாம் அறிந்ததுதான்.

கடந்த 19 ஆம் தேதி பிப்ரவரி 2017ல், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுகிற உ.வே.சா அவர்களின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கெளரவித்தது தற்போதைய அரசு.

தங்கத் தமிழன் வாழ்ந்த இடம், வங்கக் கவி வந்துபோன இடத்தை இடித்துத் தரைமட்டமாக்கப் படும்போது தமிழார்வலர்களெல்லாம

மேலும்

சங்கரன் அய்யா சொன்ன கருத்து முற்றிலும் உண்மை. தமிழன் முன்னவர்க்கு செய்யும் நன்றியைவிட கொடுமைகள்தான் அதிகம்..இதே சம்பவத்தைப் போல் இன்னும் ஏராளாமான உதாரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கலாம்.. அரசு அறிவித்த, தமிழறிகளின் நினைவில்லங்கள் பல பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதைத் தோண்டினால் இன்னும் பல பொக்கிஷங்கள் நம் நினைவுக்கு வரும். 26-Feb-2017 8:50 pm
சுவடிகளை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து நம் கரங்களில் இலக்கிய புத்தகங்களாகத் தவழவிட்ட உத்தமத் தமிழன் உ வே சா வின் இல்லத்தை சுவடு தெரியாமல் அழிக்கிறார்கள் . என்னே தமிழன் முன்னவர்க்கு செய்யும் நன்றி ! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனுஞ் சொல் -----வள்ளுவர். ஈராயிரம் ஆண்டுகளில் மாறிவிட்ட சூழ் நிலையில்... தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஆசானின் கட்டளையை சிரம் மேல் ஏற்று நோன்பாய் நூற்று நோற்றான் வென்று மாண்டான், உதவி ஆற்றாத தமிழ் மகன் தோற்றான் கொல்லெனுஞ் சொல்லோடு வாழ்கிறான் . அன்புடன், கவின் சாரலன் 26-Feb-2017 7:26 pm
தாங்கள் கூறியபடி நினைவில்லமாகப் பராமரிக்க, தமிழ்மேல் பற்றுள்ள நம்மவர்கள் அனைவரும் ஏதேனும் முயற்ச்சி எடுக்க வேண்டுமய்யா!.. தங்களின் பதிலுக்கு நன்றி.. 26-Feb-2017 11:52 am
உ வெசா அவர்கள் தமிழ்த்தொண்டாற்றியவர் அவரின் வீட்டை நினைவில்லமாக வைத்து பராமரிக்கவேண்டும் தமிழ்த்தேனீ 26-Feb-2017 11:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78

இவர் பின்தொடர்பவர்கள் (1)

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78

இவரை பின்தொடர்பவர்கள் (1)

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
மேலே