கற்பனை சுகங்கள்

" கற்பனை சுகங்கள் “ கதை

நடுவிலே ஒரு கயிற்றுக் கட்டில் அதன் மேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு பார்வையை சுழலவிட்டார் தியாகேசன்.

பிரும்மாண்டமான தோட்டம் பண்ணை ஒரு பக்கம் பச்சைப்பசேல் என்று பசுமையாகக் தொடர் வண்டி போல காட்சி அளிக்கும் வரிசையான வளமான தென்னை மரங்கள்

சற்றே பார்வையைத் திருப்பினால் கொத்துக் கொத்தாய் காய்த்து பழுத்து தொங்கும் மாங்கனிகள் உள்ள மாந்தோப்பு அப்படியே பலாமரம் கொய்யா மரம் மாதுளை , முந்திரிமரங்கள் அங்கே இருந்து கூவும் கிளிகளின் குயில்களின் இனிமையான கானம்

தென்றலாய் வருடும் காற்று எக்காலத்திலும் வற்றாத வண்ணம் கோமதி அம்மனின் அருளோடு அமைந்த பிரும்மாண்டக் கிணறு அதிலிருந்து செவ்விளநீரைப் போன்ற ருசியான தண்ணீர் வாய்க்கால் வழியாக சலசலத்து ஓடும் சப்தம்,
ஆஹா என்ன வரம் வாங்கினோமோ தெரியவில்லை

நம் முன்னோர்கள் நமக்கு இப்படி ஒரு அருமையான சொத்தையும் மாடு மனை பசுமாடுகள் அவற்றின் சாணம் கோமயம் எல்லாமே நிலங்களுக்கு உரமாய் ஆகிக்கொண்டிருக்கிரது அவை கொடுக்கும் சுவையான பாலிலே தோய்த்த கட்டித் தயிர் . வெண்ணெய் நெய் எல்லாமே இயற்கையாய் அஞுபவித்து வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

ஐயா என்கிற குரல் கேட்டு நிமிர்ந்தார் தியாகேசன் இந்தாங்க இளநீர் அந்த மரத்திலே இருந்து எடுத்தேன் அதை வெட்டி சாமிகிட்டேவெச்சு கும்புட்டுட்டுதான் கொண்டாந்தேன் என்றான் முனியன் அவனைப் பாத்து சிரித்தபடி அந்த இளநீரை வாங்கி அண்ணாந்து ஒரு சொட்டும் வீணாகமல் குடித்துவிட்டு அந்த இளநீரக் காயை அவனிடம் கொடுத்தார்

ஆமா நீ எங்கிட்டே வேலைக்கு சேர்ந்து இன்னியோட 20 வருஷம் ஆகுதப்பா ஏதோ என்னை குழந்தை மாதிரி கவனிச்சுக்கறே என்றார்
ஐய்யா நீங்களே என்னை உங்க வீட்டுப் பிள்ளை மாதிரிதானே பாதுக்கறீங்க மகராஜா உங்க தயவுலே நாங்க சுபிக்ஷமா இருக்கோமே இதைவிட என்னங்க வேணும் நான் என்னிக்கும் உங்க கிட்டே நன்றி மறக்காம இருந்தாப் போதும்ன்னு வேண்டிக்கிறேன் தினமும் அந்த அம்மனை என்றான் முனியன் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்

சரிங்க நான் போயி வயலுக்கு நீர்பாய்ச்சிட்டு வாரேன் என்றபடி போனான் முனியன்

ஏங்க என்றொரு அன்பான குரல் கேட்டது வேற யாரு அவர் இல்லத்தரசி மீனாட்ஷிதான் தான் வாம்மா என்றார் தியாகேசன் நானு நல்ல சூடா இட்டிலி செஞ்சேன் அப்பிடியே காஞ்ச மிளகாயும் தேங்காயும் போட்டு சட்டினி அரைச்சிருக்கேன் அப்பிடியே கொஞ்சமா வெங்காயம் அரிஞ்சு போட்டு அத்தோட ரெண்டு பூண்டுப் பல்லையும்வெச்சு அரைச்சு தெளிவா சாம்பார் செஞ்சிருக்கேன் கொண்டாரவா என்றாள்.
அவருக்குத் தெரியும் அவள் கைமணம் அப்பொழுதே அவருக்கு நாவிலே நீர் சுரந்தது இருந்தாலும் இல்லே மீனாக்ஷி கொஞ்ச நேரம் போவட்டும் இப்பத்தான் இளனி குடிச்சேன் நீ என்னா எப்போ பாத்தாலும் ஏதாச்சும் வேலை செஞ்சிகிட்டே இருக்கே என் பக்கத்திலே உக்காரு என்றார் சும்மா இருங்க எனக்கு வெக்கமா இருக்கு என்றாள் மீனாக்ஷி.

ஆமாம் கல்யாணம் ஆகி பிள்ளை பெத்து எல்லாத்துக்கும் கல்யாணமே செஞ்சு வெச்சு பேரன் பேத்தி பாத்தாச்சு இப்பவும் உனக்கு வெக்கம் மட்டும் போகலை என்றார் தியாகேசன்.

திடீரென்று ஒரு குரல் கேட்டது ஏங்க எப்போ பாத்தாலும் இப்பிடி இந்த கம்ப்யூட்டர்லே என்னதான் இருக்கோ அதைக் கட்டிண்டு உருண்டு கிட்டிருக்கீங்க போயி ரேஷனை வாங்கிட்டு வாங்க அப்புறம் அவன் சர்க்கரை இல்லே அரிசி இல்லேன்னு படுத்துவான் என்றாள் லதா

நிமிர்ந்து பார்த்த சபேசன் எழுதிக் கொண்டிருந்த கதையை அப்படியே நிறுத்தி சேமித்துவிட்டு சரி சரி கத்தாதே நான் போயி வாங்கிட்டு வரேன் என்றபடி பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார் .

சுபம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

எழுதியவர் : தமிழ்த்தேனீ (15-Jul-18, 12:54 pm)
சேர்த்தது : thamizthenee
Tanglish : karpanai sugangal
பார்வை : 270

மேலே