vaira31mani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vaira31mani
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  31-Aug-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2011
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  11

என்னைப் பற்றி...

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ் நாட்டின் கிளையில்நிதி மற்றும் கணக்கு அதிகாரியாக பணியாற்றுகிறேன்.

என் படைப்புகள்
vaira31mani செய்திகள்
vaira31mani - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 5:33 pm

இன்பத்தை விரும்பும் நாம்
துன்பத்தைக் காதலிப்பதில்லை!
இனிப்பை விரும்பும் நாம்
கசப்பை விரும்புவதில்லை!
இளமையைக் காதலிக்கும் நாம்
முதுமையைக் காதலிப்பதில்லை!
காதலிக்காத எதுவும்
வாழ்வில் வராமலிருப்பதில்லை!
உண்ண உணவளித்து
அனுபவத்தைக் கேட்டறிந்து
நல்ல உடையளித்து
நல்ல இடம் அளித்து
ஒருவரை ஒருவர்
மதித்துவாழும் முதுமையை
இப்படி நாம் காதலிப்போம்!-

மேலும்

vaira31mani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2014 2:59 pm

பெண்
என்னை நோக்கி வீசி எறிந்த
ஒவ்வொரு வரதட்சணை அணுகுண்டும்
என்னை முன்னேற்றிய ஏணிப்படிகள்!
தாயாய் தாலாட்டிய புத்தகங்கள்
பாலைவனத்தில் உருவாகிய சோலைவனம்!
கடவுளிடம் மட்டுமே பேசிய வரிகள்
சத்தியமான உண்மைகள்!
நெஞ்சத்தில் மறைந்த
நெருஞ்சி முட்களை எடுத்துவிட
எந்த மருந்தைத் தேடுவது?
நடந்தவை நடந்தவையாக
நடக்க இருப்பவை நல்லவையாக
நாளைய பொழுது நல்லவையாக
இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உலகப் பார்வைக்கு
வாழ்ந்து கொண்டிருக்கும்
நெகிழி இயந்திரம்.

மேலும்

vaira31mani - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 5:51 pm

இமை சேர
இன்று எனக்கு பிறந்தநாள் விளக்கு கம்ப நண்பனுடன்
பூமகளின் கைகுலுக்கல் எட்டி நோக்கிப் பார்க்கையில்
அடுத்த வீட்டில் உடல் நலமில்லாத
தாத்தா பாட்டியின் மார்கழிமாத பச்சைத் தண்ணீர்
குளிர் குளியல் காண மனமின்றி வாடும்
அவலநிலை காண மறுக்கும்
இலை இமையில் ஒட்டிய கண்ணீரை
துடைக்க யார் வருவார்?
இதயமும், எலும்பும் உருக்குலையும் நாளை
எதிர்பார்த்து எலியின் எச்சத்தில் கலந்த ரேஷன்
இட்லியின் சிறு விள்ளலை அள்ளி எடுக்க மறுக்கும்
நான்குகால் நன்றியுள்ள இனத்தின் பச்சைக் கண்ணில்
ஏனிந்தக் கண்ணீர்?
உங்களுக்குமா இந்த உணவு எனக் கேட்கிறதோ?
பாடுபட்டுப் பணத்தைப் புதைத்து வாழும் கேடு கெட்ட
மானிடருக்கு நெய

மேலும்

இந்த அவலங்களுக்கு என்றோ ஒருநாளாவது விடிவு கிடைக்கும் என இன் நாளில் இறைவனை வேண்டிக் கொள்வோம். கருத்தாழம் மிக்க வரிகள் அருமையான படைப்பு! 25-Dec-2013 6:57 pm
vaira31mani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2013 10:09 am

கமிஷன்
“என்னங்க? டாக்டரைப் பாத்தீங்களா? என்னதான் சொல்றார்?“
“நம்ம பையனுக்கு வந்திருக்கிற நோய் பன்றிக்காய்ச்சலாம். பையனுக்கு பத்து வயசு தான் ஆகிறதாலும், பையன் உடல்நிலை மோசமாக இருக்கறதால இப்போதைக்கு ஏதும் சொல்லமுடியாதுங்கறார். ஆண்டவன் தான் நம்ம மோகனைக் காப்பாத்தணும்“
மருத்துவமனை வார்டில் பெட்டில் படுத்திருந்த பையன் மோகனுக்கு ட்ரிப்ஸ் ஏறுவதைப் பார்த்தபடி மனைவி உட்கார்ந்திருப்பதை வெறித்துப் பார்த்தான்.
யானை பல்தேய்க்கற பிரஷாப்பா இது! இல்லடா! இது கார் கிளீன் பண்ணுற பிரஷ்ஷூடா!
அப்பா! அப்பா! என்னடா? சொம்மா நொய்!நொய்ங்கற!
ஒரே ஒரு கேள்விப்பா?
ஏம்ப்பா உன் மீசை ரெண்ட் இஞ்ச் பிரஷ் மாதிரியும், உன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே