இப்படி நாம் காதலிப்போம்
இன்பத்தை விரும்பும் நாம்
துன்பத்தைக் காதலிப்பதில்லை!
இனிப்பை விரும்பும் நாம்
கசப்பை விரும்புவதில்லை!
இளமையைக் காதலிக்கும் நாம்
முதுமையைக் காதலிப்பதில்லை!
காதலிக்காத எதுவும்
வாழ்வில் வராமலிருப்பதில்லை!
உண்ண உணவளித்து
அனுபவத்தைக் கேட்டறிந்து
நல்ல உடையளித்து
நல்ல இடம் அளித்து
ஒருவரை ஒருவர்
மதித்துவாழும் முதுமையை
இப்படி நாம் காதலிப்போம்!-