வசந்தத்தை தொலைத்த மனிதர்கள்
என் வீட்டு வஜிலிலே ஒரு முற்றம்
அதிலே ஒரு மாமரம் - அது எந்நேரமும்
நிழல் தரும் - இதை விட அங்கு
வேறு எதுவுமில்லை நான் கூருவதட்கு
இரு வெள்ளை புறாக்கள் பறந்து வந்து
அவ் மரநிழலில் உட்காரும் - சோர்வில்லாமல்
கதைகள் பேசும் - ஒன்றை ஒன்று நேசிக்கும்
கொஞ்சிக் குலாவும் - மெல்ல நடை பயிலும்
ஒன்றை ஒன்று நேசிக்கும்
கொத்திச் சாப்பிடும் தீனியை கூட பகிர்ந்து
சாப்பிடும் - அவை காசு பணம் கேட்பதில்லை
கடிதங்கள் அனுப்புவதில்லை - அன்பால் அன்பை
நேசிக்கும் - குலாவும் - அதில் ஐம்பது வீத அன்பைக்கூட
மனிதர்களாகிய நாம் பெற்றது உண்டா???
வாருங்கள்!!!
வசந்தத்தை தொலைத்த மனிதர்களே!!!
என் வாயிலுக்கு,
அந்த ஜோடி புறாக்களிடம் வந்து
ஜோதிடம் கேளுங்கள்!
அன்பிற்கு அர்த்தம் சொல்லும்
பாசத்திற்கு பாடம் சொல்லும்
அவையே மனித ஜோடியை விட
மகத்தான ஜோடி!!!