வசந்தி ராஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வசந்தி ராஜன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-May-2015 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 0 |
வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது
யானையால் மட்டும் தான் குதிக்க முடியாது !
வண்ணத்துப் பூச்சிகள் தம் கால்களால் தான் சுவையை அறிந்து கொள்கின்றன !
ஆஸ்ட்ரிச்சின் கண்கள் அதன் மூளையின் அளவை விட பெரியது !
பல் மருத்துவர்கள் கூறும் அறிவுரை பல் துலக்குவதற்காக உபயோகப்படுத்தும் தூரிகைகளை கழிவறையிலிருந்து 6 அடி தள்ளி வைக்க வேண்டும் . ஏனெனில் கழிவறையிலிருந்து காற்றில் பரவும் துகள்கள் தூரிகைகளில் ஒட்டி கொள்ளும் !
மனிதனின் கண்கள் மட்டும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும் !
காது, மூக்கு வளர்ச்சி நிற்காது
எறும்புகள் தூங்குவதில்லை !
ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.
பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.
அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.
புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.
அவர்களில் ஒரு சிற்பி இந்தப் ப