vignesh prabhu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vignesh prabhu |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 30-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 8 |
மனிதநேயம் மிக்கவன்...
மழை பெய்யாவிட்டாலும்
மண் வாசனை வீசற ஊரு....
வறண்டு கிடந்தாலும் வாழ வைக்கும் ஊரு....
பள்ளிக்கூடம் இங்க மரத்தடி...
படிக்கலேன தடியடி...
பட்டணம் போக பாதை இருக்கு-ஆனா
ஏத்திட்டு போக bus இல்ல....
பனை மரமு ,பாறையு எங்க ஊரு அதிசயம்...
பழைய சோறு, பனங்காய் ,கொட்டிக்கெழங்கு இதுயெல்லாம் எங்க ஊரு விருந்து.....
சந்தைல சட்ட வாங்க
சட்ட சப விவாதம்....
தீவாளி வந்தாலே பளபளக்கு ஊரு-ஆனா
ஆவாரம் பூ தா,
என் அத்த மக மத்தாப்பு...
படித்தவன் பாடம் நடத்துறான் பள்ளிக்குள்ளே
படிக்காதவன் பள்ளிகுடம் நடத்துறான் ஊருக்குள்ளே ......
மரத்தை வெட்டாதீர்கள் என்று எழுதி இருந்தது மரப்பலகைகளில்.........
நாம் கருவறையில் இருக்கும் போது தாயும் .....
நாம் தோளில்இருக்கும் போது தந்தையும்....
நாம் நடக்கும் போது நம் உறவினரும்.....
நமக்கு ஒரு குழந்தையை பெற்று தரும்வரை
மனைவியும்....
நாம் இறந்த பின்பு நம் பிள்ளைகளும்
"உறங்காத விழிகள் தான்...!"
கோவெளி கங்கை ஆற்றங்கரை ஓரம்
கானல் நீராக மறையும் ஆற்று படுக்கை....!
ஈழமே இங்கு போர் களத்தில்
நானும் அவளும் மட்டும்
காதல் களத்தில்....
எங்களுக்காக
ஆயிரம் தேயிலை தோட்டங்கள் இருந்தாலும்
அவளும் நானும்
பார்பதென்னவோ-அந்த
ஒற்றை பனைமர நிழலில் தான்...
காதலின் மலர் ரோஜா என்றாலும்
காலம் எங்களுக்கு கொடுத்தது
கள்ளி பூக்களை தான்...
சிங்களத்துக்கு சிறந்த காதல்
எங்கு புரிய போகிறது....?
இதயத்தை துளைக்கும் தோட்டாக்கள்
இணைந்த இதயத்தின் வலிகளை புரியாதவை...
"இந்த காதலும் ஈழத்தை போன்றது தான்
"இணையதவை" "