Aravind K புது கவிதை



22 Jun 2013
8:11 am
இது காதல் அல்ல ..வலிகளின் விற்பனை ...! பல வருடங்களுக்கு பிறகு அவளின் அனுமதி இல்லாமலே அவளின் மழலை மொழி கேட்டேன் ...... இதயத்தின் அடிவாரத்தில் தேங்கி கொண்டிருந்த ஏக்கங்களின் பசியாற்றிய பெருமை அவளுக்கு உண்டு ... அருவியில் விடாமல் விழுந்து கொண்டிருக்கும் வெள்ளை தண்ணீர் போல் அவள் வார்த்தைகளின் நளினங்கள் ..... குமரி தமிழையும் , மதுரை தமிழையும் கலந்து பேசிய அந்த உரையாடல் பாண்டியனையும் ,சேரனையும் ஒரு கை பிடிக்குள் அடைத்து வைப்பது இருந்தது ... அவள் சிரிப்புக்கள் ஒவ்வொன்றும் அவள் மீதிருந்த பழைய கசப்புணர்வுகளை தோற்கடித்து விட்டது .... கானல் நீரில் குளித்த நியாபகமாய் இருந்த என்மனது , அவளின் வார்த்தை என்னும் வெள்ளை அருவியில் மூழ்கியதாக நினைவு .... நேற்று இரவோடு என் வலிகள் அனைத்தையும் விற்று விட்டேன் கணிசமான விலைக்கு அவளே வாங்கி விட்டாள்..... வாங்கிய வலிகளை அவள் நிச்சயம் தரமாட்டாள், நான் கடனாக கொடுக்கவில்லை தான் ... உண்மையில் இதனை நாளும் கொட்டிய கண்ணீருக்கும் மிக பெரிய நல்ல இழப்பீடு அவள் தேன் மொழியை கேட்டது ... அவள் இதயத்தில் நிச்சயம் இடம் பிடிக்க வேண்டும் என்கின்ற பொல்லாத ஆசைகள் இப்போது என்னிடம் இல்லை .... அப்பா அம்மா தங்கை அக்க சித்தி சித்தப்பா குழந்தைகள் என அனைவரையும் பற்றியும் தெரிந்து கொண்டவள் ..... ஒரு மணிநேரத்திலும் என்னை பற்றி மூச்சு கூட விடவில்லை இறுதியில் கண்ணீர் கண்களோடு தொலை பேசியேயும் துண்டித்தேன் மீண்டும் அவள் மொழியை கேட்க்க உதவிய நட்புக்களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் ------ அரவிந்த்
Aravind k
  • 103
  • 6
  • 2

மேலே