அவளுடன் மட்டும் இன்னும் பேசுகிறேன் தனிமையில் !!!!!!!!

புன்னகையுடன் மலர்ந்த பின்னும்
வாசனை வீசாத ரோஜாக்கள் !

வண்ணமில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சி !

பூமியிலிருந்து வானோக்கி
செல்லும் மழைத்துளிகள் !

மணிக்கொரு முறை மாறி மாறி
வந்த சூரியனும் சந்திரனும் !

கருப்பு நிறத்தில் ஒரு வானவில் !

காலுக்கடியில் கானல் நீர் !

சாத்தியமில்லாத இவையனைத்தும்
சத்தமில்லாமல் நடந்தது !

இன்று அவள் என்னோடு இல்லாத
தருணத்தில் ......

அவளுடன் மட்டும் இன்னும் பேசுகிறேன் தனிமையில் !!!!!!!!

எழுதியவர் : Aravind (14-Mar-12, 5:58 pm)
பார்வை : 457

சிறந்த கவிதைகள்

மேலே