ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - ஊக்கமுடைமை
குறள் - 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
ஊக்க முடையா னுழை.
Translation :
The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
Explanation :
Wealth will find its own way to the man of unfailing energy.
எழுத்து வாக்கியம் :
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
நடை வாக்கியம் :
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.