ஊக்கமுடைமை (Oookamudaimai)

குறள் எண் ஊக்கமுடைமை
591 உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.
592 உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
593 ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்.
594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
597 சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
599 பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
600 உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பொருட்பால்
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

காமத்துப்பால்
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
மேலே