ஜெய் ஹிந்த் 2

Jaihind 2 Tamil Cinema Vimarsanam


ஜெய் ஹிந்த் 2 விமர்சனம்
(Jaihind 2 Vimarsanam)

1994-ல் வெளிவந்த ஜெய் ஹிந்த் படத்தின் தொடர்ச்சியாக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜெய் ஹிந்த் 2.

இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா,சுர்வீன் சாவ்லா, மயில்சாமி, மனோபாலா, பிரம்மானந்தம் ஆகியோரும், மற்ற கதாப்பாத்திரங்களில் ராகுல் தேவ் மற்றும் சார்லோட்டே கிளைர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெய் ஹிந்த் படத்தைப்போல இல்லாமல் ஜெய் ஹிந்த் 2 கதை மாறுபட்டது. ஒரு குடும்பம் தன் சிறு மகளுக்களாக தனியார் பள்ளியில் இடம் கேட்க சென்று, இடம் கிடைக்காததால் அவமானத்துடன் குடும்பமே தற்கொலை செய்ததைக் கண்டு கொதித்தெழுகிறார், அர்ஜுன். சுர்வீன் சாவ்லா அர்ஜுனின் வீரத்தைக் கண்டு காதலிக்கிறார்.

தனியார் பள்ளிகளுக்கு எதிராக அர்ஜுன் செய்யும் அதிரடியான விஷயங்கள், குழந்தைகளின் கல்விக்கு உதவியதா? என்பதை இப்படத்தில் பரபரப்புடன் காணலாம்.

அதிரடிக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார், அர்ஜுன். பிரம்மானந்தத்துடனான நகைச்சுவை ரசிக்கும் விதம்.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-07 15:49:24
2.5 (5/2)
Close (X)

ஜெய் ஹிந்த் 2 (Jaihind 2) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே