லிங்கா

Lingaa Tamil Cinema Vimarsanam


லிங்கா விமர்சனம்
(Lingaa Vimarsanam)

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., லிங்கா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் பரிசு என்று மக்களால் கொண்டாடப்படும் படம்., லிங்கா.

இப்படத்தின் நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகிகளாக அனுஷ்கா ஷெட்டி,சொனாக்ஷி சின்ஹா மற்ற கதாப்பாத்திரங்களில் சந்தானம், தேவ் ஜில், பிரம்மானந்தம், ஜகபதி பாபு, கருணாகரன், ராதா ரவி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கும் தொடக்கம் பார்க்க பிரம்மிக்க வைக்கிறது. திரைக்குப் பின்னால் பார்த்த ரஜினியா? என்ற கேள்வி நம் மனதில் எழும் அளவிற்கு இளமையான ரஜினி. தன் நடிப்பிலும், நடனத்திலும் நம்மை கவர்கிறார்.

நம் நாட்டை ஆண்ட பிரித்தானியர்களின் ஆட்சியில் சிறப்பான மாவட்ட ஆட்சியாளராக ரஜினி. தங்களிடம் இருக்கும் நீர் வளத்தை அறியாமல் நீர் வளமில்லை என்று தற்கொலை செய்யும் சோலையூர் மக்களின் அறியாமையை நீக்கி நீரை உபயோகிக்கும் விதத்தைக் கூறி நடைமுறை செய்கையில் பிரித்தானிய அரசுக்கு எதிரியாகிறார், ரஜினி. அவ்வூர் மக்களில் உள்ள பெண்ணாக சொனாக்ஷி சின்ஹா ரஜினியின் மீது காதல் வயப்படுகிறார். ரஜினி மக்களுக்கு உதவியதால் பிரித்தானியர்களால் தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், பதவியையும் இழக்கிறார். பிரித்தானியர்களின் சூழ்ச்சியில் சிக்கிய மக்களால், ரஜினி அவ்வூரிலிருந்து விரட்டப்படுகிறார். மனம் உடைந்து சொனக்ஷியுடன் அவ்வோரைவிட்டு வெளியேறுகிறார்.இது நினைவலைகளில் வரும் கதை. இக்கதை மிகவும் சிறப்பு.

முதல் ரஜினியும் சொனக்ஷியும் என்ன ஆனார்கள் என்பதையும், மறுபாதியில் குதூகலமான முதல் ரஜினியின் பேரன் இரண்டாம் ரஜினியையும்.., இரண்டாம் ரஜினி, சந்தானம் மற்றும் அனுஷ்காவுடன் சேர்ந்து அடிக்கும் கலாட்டாவையும், இரண்டாம் ரஜினி தன் தாத்தாக்காக சோலையூர் மக்களின் அன்பான கோரிக்கையை நிறைவேற்றினாரா? என்பதை இப்படத்தில் விறுவிறுப்புடன் சுவாரஸ்யமாகக் காணலாம்.

கதாநாயகிகள் இருவரும் தன் அழகிலும் நடிப்பிலும் நம்மை ஈர்க்கின்றனர். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களின் கதாப்பாத்திரதிற்கேற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ,பிரமாண்ட கதையை சிறப்பாக இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கேட்கும் விதம். பின்னணி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக இசையமைத்திருக்கலாம். கதை முடிவு மட்டும் செயற்கையாக இருப்பதை உணர வைக்கிறது. மற்றபடி கதை மிகஅருமை.

நல்ல கதை மற்றும் கலைஞர்களின் உழைபிற்க்காக பார்க்கலாம் பலமுறை.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-12 12:08:09
4 (16/4)
Close (X)

லிங்கா (Lingaa) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே