கயல்

Kayal Tamil Cinema Vimarsanam


கயல் விமர்சனம்
(Kayal Vimarsanam)

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கயல்.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஆனந்தி, சந்திரன்,இமான் அண்ணாச்சி,வின்சென்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆறு மாதம் சம்பாதித்து ஆறுமாதம் ஊரை சுற்றும் இளைஞர்களாக சந்திரன் மற்றும் அவரது நண்பர். நன்றாக ஊரைச்சுற்றி மகிழ்ச்சியாக இருந்தவர்கள் ஒருமுறை காதலித்தவர்களுக்கு உதவிய போது காதலித்து ஓடிய பெண் வீட்டினர் கையில் சந்திரன் மற்றும் அவரது நண்பர் மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கின்றனர். காதலித்து ஓடிய பெண் வீட்டில் வேலை செய்யும் ஆனந்தியைப் பார்த்து காதல் கொண்டு காதலை அனைவரின் முன்னால் கூற அவ்வீட்டாருக்கு கோபம் வந்து இவனை அனுப்பி விட்டு விடுகின்றனர். ஆனால் ஆனந்தியோ சந்திரன் காதலைக் கூறிய விதத்தில் மயங்கி காதலில் விழுகிறார்.அதனால் சந்திரனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சந்திரனைத் தேடி தன் பாட்டியின் அனுமதியுடன் சந்திரனைத் தேடிச் செல்கிறார்.

ஆனந்தி சந்திரனை தேடிக் கண்டறிந்தாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதை பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

பிரபு சாலமன் படமாக்கிய விதம் சிறப்பு. புதுமுகங்களின் நடிப்பு பரவாயில்லை. பாடல்கள் கேட்கும் விதம்.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-26 12:39:19
(0)
Close (X)

கயல் (Kayal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே