Shankars Ai Tamil Cinema Vimarsanam


ஐ விமர்சனம்
(Shankars Ai Vimarsanam)

பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஐ.

இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களில் விக்ரம் மற்றும் எமி, மற்ற கதாப்பாத்திரங்களில் சந்தானம், உபேன் படேல், சுரேஷ் கோபி, ஓஜாஸ் ரஜனி, ராம்குமார், ஸ்ரீனிவாசன், மோகன் குமார் ஆகியோர் நடிதுள்ள்ளனர்.

மாடல் அழகியான எமியை காதலிக்கும் கட்டழகனான விக்ரம் தன் காதலை எமியிடம் சொல்ல தயங்குகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் உபனிடமிருந்து தப்பிக்க விகரமின் உதவியை நாடி விக்ரமை காதலிப்பது போல் நடித்து விக்ரமிற்கு விருப்பமில்லா சீனப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளவைக்கிறார். விகரமின் அழகில் மயங்கும் திருநங்கை ஒஜாஸ் எமிக்கு எதிரியாக மாறுகிறார், எமியின் மீது வெறியுடன் இருக்கும் உபனும் விக்ரமிற்கு எதிரியாக மாறுகின்றார்.

இருவரும் தன் எதிரிகளை சமாளித்து தன் காதலில் வெற்றி கண்டு, உலகில் புகழ்பெற்று, எமி மற்றும் விக்ரம் திருமணம் நிகழ இருக்கும் இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் திருப்பங்களால் இருவர் வாழ்கையும் என்ன ஆனது? என்பதையும், விக்ரமிற்கு நேரும் அசம்பவங்களையும் அதற்கான காரணத்தையும் இப்படத்தில் விறுவிறுப்பாக சமூக நோக்கில் காணலாம்.

தன் ஒவ்வொரு கதையிலும் ஷங்கர், தன் படத்தைப் பார்க்கும் மக்களுக்கு ஒரு மாயாஜாலத்தை காண்பிக்கிறார். விக்ரம் கலைஞன் என்பதை நிரூபிக்கிறார், எமியின் நடிப்பு கச்சிதம், மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களும் தன் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.

ரஹ்மானின் இசை அருமை. ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் சிறப்பு.

ஐ - பணியாற்றிய கலைஞர்களுக்காக பார்க்கலாம் பலமுறை.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-01-14 19:34:27
2.8 (11/4)
Close (X)

ஐ (Shankars Ai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே