டார்லிங்

Darling Tamil Cinema Vimarsanam


டார்லிங் விமர்சனம்
(Darling Vimarsanam)

அறிமுக இயக்குனர் சாம் அன்டன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள திகில் படம்., டார்லிங்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி டேன்ஞ், ராஜேந்திரன், கருணாஸ், பாலா சரவணன் நடித்துள்ளனர்.

கோழைகளாக ஆளேயில்லா ஒரு வீட்டில் தற்கொலை செய்ய முற்படும் நண்பர்கள் கூட்டணியில் உள்ளவர்களாக ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலா சரவணன். இந்நண்பர்கள் கூட்டணியில் நிக்கி, ஜி.வி. பிரகாஷை காதலிக்க அவரோ முதலில் மறுக்கிறார். பின் நண்பர்களின் தூண்டுதல் காரணமாக காதலை ஏற்கிறார். நிக்கியுடன் ஜி.வி. பிரகாஷ் நெருங்கும் போதெல்லாம் திகிலான நிகழ்வுகள் நிகழ்கிறது.

இதனால் அனைவரும் பயந்து செய்யும் சில விஷயங்களும், தங்களுக்குள் பேசும் காட்சிகளும் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது. திகிலான நிகழ்வுகள் நிகழ காரணமாகயிருந்த பேயின் அட்டகாசங்களையும், நண்பர்கள் கூட்டணியை மிரட்டும் காட்சிகளையும் விறுவிறுப்புடன் இப்படத்தில் காணலாம்.

அறிமுக நாயகன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பு பரவாயில்லை. பின்னணி இசை மிரட்டுகிறது.

டார்லிங் - விறுவிறுப்பான பொழுதுபோக்கு.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-01-14 21:05:39
(0)
Close (X)

டார்லிங் (Darling) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே