கூட்டம் Koottam
Tamil Cinema Vimarsanam
( Vimarsanam)
நக்சலைட்டாக இருப்பவர்கள் சண்டைப் போடுவதை விட்டு, இயல்பான மனிதனை போல் வாழ விரும்பி மக்களோடு வாழ முற்படுகிறார்கள். இதன் விளைவு தான் "கூட்டம்" .
நக்சலைட்டின் தலைவராக கிஷோர் தன் அருமையான நடிப்பை, இப்படத்தில் சில மௌனங்களில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் நாயகனாக நவீன் சந்திரா அதிரடி காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார்.நாயகி பியா தன் வழக்கமான உடைகளை விட்டு விட்டு பாவாடை தாவணியில் அசத்தியுள்ளார்.
கிஷோர் தனது கூட்டத்தினருடன் நக்சலைட்டை விட்டு விலகி போலீசில் சரணடைகிறார்கள்.அப்போது உயர் போலீஸ் அதிகாரியான சாய்குமார் சிட்டியில் கொலை குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை, இக்கூட்டத்தினர் மூலம் தீர்த்துகட்ட முடிவெடுக்கிறார். அதற்காக கிஷோரிடம் ஒரு ஒப்பந்தமும் போடுகிறார். அதாவது, சிட்டிக்குள் குற்றங்கள் செய்பவர்களை தீர்த்துக்கட்டினால், நீங்கள் சுதந்திரமாக வாழலாம் என்று கிஷோரிடம் கூறுகிறார். இதற்கு கிஷோரும் ஒப்புக்கொள்கிறார்.
போலீஸ் அதிகாரியான சாய்குமார், ஒப்பந்தம் முடிந்த பின் கூறியதைப் போல செய்தாரா?கிஷோரும்,அவரது கூட்டத்தினரும் அவர்கள் நினைத்தது போல வாழ்ந்தார்களா?என்பைதை இக்கதையில் அதிரடியாகவும்,விறுவிறுப்பாகவும் காணலாம்.
பாடல்கள் பரவாயில்லை.
கூட்டம் - ஆட்டம், ஓட்டம்
இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.
கூட்டம் koottam தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com